மேலும் அறிய

TN Weather Alert : தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகுதா மழை.? வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்

TN Weather Alert : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்றுடன் மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வரும் நாட்களில் மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்து மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கவுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 12-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

13-07-2026 முதல் 18-07-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

12-07-2026 முதல் 16-07-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
12-07-2026 முதல் 14-07-2026 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை வானிலை முன்னறிவிப்பு

இன்று (12-07-2026) மற்றும் நாளை (13-07-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:

15-07-2026 மற்றும் 16-07-2026 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

12-07-2026 மற்றும் 13-07-2026: அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14-07-2026: மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15-07-2026: மத்திய கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

குழந்தை இதய சிகிச்சையில் சென்னை அப்போலோவின் உலக சாதனை !! திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு விடை
குழந்தை இதய சிகிச்சையில் சென்னை அப்போலோவின் உலக சாதனை !! திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு விடை
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
குற்றவாளிகளுக்கு ஆதரவா? போலீஸ் தனிப்படை கலைப்பு! எஸ்.பி.,யின் அதிரடி நடவடிக்கை
குற்றவாளிகளுக்கு ஆதரவா? போலீஸ் தனிப்படை கலைப்பு! எஸ்.பி.,யின் அதிரடி நடவடிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Tata Aeris CNG Review: இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
Embed widget