Meera Mithun: நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் - சென்னை முதன்மை நீதிமன்றம்
நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![Meera Mithun: நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் - சென்னை முதன்மை நீதிமன்றம் Chennai Court Issues Arrest Warrant Against Meera Mithun for Derogatory Comments on Scheduled Caste Meera Mithun: நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் - சென்னை முதன்மை நீதிமன்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/23/050c3db31ecd2896d9f963c6804d4ad7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில், நடிகை மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4 ம் தேதி ஆஜர்படுத்துமாறு அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக,
மாடலிங் துறையில் பிரபலமான நடிகை மீரா மிதுன் ‘8 தோட்டாக்கள்’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ரியாலிட்டி ஷோவான ‘ஜோடி நம்பர் ஒன் சீசன் 8’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் படக்குழுவுக்கும், மீரா மிதுனுக்கும் இடையே பிரச்னை எழுந்த நிலையில், அவர் அதிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் -3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார்.
மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அனைத்து நாட்களிலுமே வீடு சர்ச்சைகளால் நிரம்பியிருந்தது. அதனைத்தொடர்ந்து எலிமினேட் செய்யப்பட்ட மீரா மிதுன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதில் சூர்யா, விஜய், அஜித் குறித்து இவர் பேசிய வீடியோ கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து பட்டியலினத்தை குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மீராமிதுனை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி உட்பட பலர் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் அவரின் காதலர் எனச் சொல்லப்படும் சாம் அபிஷேக் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் வேண்டும் மீரா மிதுன் தரப்பு மனு தாக்கல் செய்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)