மேலும் அறிய

Low Interest Loan Scheme : ரொம்ப கம்மி வட்டியில் ரூ.20 லட்சம் கடன் உதவி.! விண்ணப்பிக்க அரசு அழைப்பு- என்னென்ன ஆவணங்கள் தேவை.?

Low Interest Loan Scheme : குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் விராசாத்,கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் மூலம் 30 லட்சம் வரைகடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவியை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடன் உதவித்திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சொந்தாக தொழில் செய்து முன்னேறும் வகையில் கடன் உதவித்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன். சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

கடன் உதவி பெற தேவையான தகுதிகள்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம நகர்ப்புறங்களில் ரூ.8,00,000/- வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும் (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்)
திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/-ம் திட்டம் 2-ன் கீழ் ஆண்டுகளுக்கு 8% பெண்களுக்கு வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30.00.000/- கடன் வழங்கப்படுகிறது. 

குறைந்த வட்டியில் கடன் உதவி திட்டம்

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4%வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1.00.000/-ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10% பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையின மாணவ/மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை /முதுநிலை தொழிற்கல்வி/ தொழில் நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு

அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும் திட்டம்-2ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியருக்கு 5% வட்டி விதிகதிலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத்கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள் / கருவிகள் / இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?

சென்னை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள். இஸ்லாமியர்கள், புத்தமதத்தினர். சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் / மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடன் விண்ணப்பம் - தேவைப்படும் ஆவணங்கள்

தனி நபர் கடன் திட்டம், சுய உதவிகுழுக் கடன், விராசாத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்)

1. சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்
2. சாதி சான்றிதழ் / வருமான சான்றிதழ் / குடும்ப அட்டை (அ) இருப்பிட
சான்றிதழ்
3. ஆதார் அட்டை
4. திட்ட அறிக்கை (கடன் தொகை ரூ.5,00,000/- க்கு மேல் இருப்பின்)
5. வங்கி கோரும் இதர ஆவணங்கள்

கல்விக் கடன்

1. சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்
2. சாதி சான்றிதழ் / வருமான சான்றிதழ் / குடும்ப அட்டை (அ) இருப்பிட சான்றிதழ்
3. ஆதார் அட்டை
4. உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate)
5. கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல் (Original)
6. மதிப்பெண் சான்றிதழ் நகல்
7. வங்கி கோரும் இதர ஆவணங்கள்

Advertisement

தலைப்பு செய்திகள்

வடையில் ஃபெவி க்விக்... அப்போ சாப்பாட்டில்? வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு ஏற்பட்ட ஷாக்
வடையில் ஃபெவி க்விக்... அப்போ சாப்பாட்டில்? வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு ஏற்பட்ட ஷாக்
மத்திய அரசு தரும் கௌரவம்! செங்கல்பட்டு மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் போட்ட முக்கிய உத்தரவு – கடைசி தேதி எப்போது?
மத்திய அரசு தரும் கௌரவம்! செங்கல்பட்டு மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் போட்ட முக்கிய உத்தரவு – கடைசி தேதி எப்போது?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
Honda ADV 160: இனி பெட்ரோல் செலவு கம்மிதான்...ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!- என்ன அம்சங்கள்?
Honda ADV 160: இனி பெட்ரோல் செலவு கம்மிதான்...ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!- என்ன அம்சங்கள்?
Udhayanidhi Vs TVK Govt.: “நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
“நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
Embed widget