Case Against Arya Update: நடிகர் ஆர்யாவுக்கு எதிரான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!
திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாகவும், சுமார் 71 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஆர்யா மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீதும் வித்ஜா புகாரளித்திருந்தார்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாக நடிகர் ஆர்யாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆர்யாவுக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிடக்கோரி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வித்ஜா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாகவும், சுமார் 71 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஆர்யா மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீதும் வித்ஜா புகாரளித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை நிலை குறித்து பதிலளிக்க சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.





















