டெல்லி கார் வெடிப்பு எதிரொலி: காஞ்சிபுரத்தில் தீவிர பாதுகாப்பு! வாகன சோதனை தீவிரம், கோயில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.
"டெல்லியில் கார் வெடி விபத்தை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் தீவிர சோதனை, கோயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு"

டெல்லி கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு சோதனைகள் தீவிரம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி வெடிவிபத்து:
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே, ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் எரிந்து நாசமானதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை 6.52 மணியளவில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து வெடிபொருள் வெடித்து, பெரிய அளவில் தீயை ஏற்படுத்தி, அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியதாக நம்பப்படுகிறது. தலைநகரில் ஏற்பட்ட இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சொல்வது என்ன?
காரின் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும், சம்பவ இடத்தில் இருந்து மாதிர்கள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் அடிப்படையிலேயே பல விவரங்கள் தெரிய வரும் என்றும் தெரிகிறது.
காஞ்சிபுரத்தில் தீவிர வாகன சோதனை
காஞ்சிபுரத்தில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் முக்கிய சாலை சந்திப்பு, பொதுமக்கள் அதிக கூடும் இடம் உள்ளிட இடங்களில் போலீசார் குவிந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் காஞ்சிபுரம் சங்கர மடம் எதிரே B1 காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் போலீசார் அவ்வழியே செல்லும் வாகனங்களை தடுத்து, நிறுத்தி வாகனம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் வரும் பொது மக்களையும் தடுத்து நிறுத்தி முழு சோதனைக்கு பிறகு அனுப்பப்பட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் மற்றும் வாகனங்களில் உள்ள உடைமைகள் வாகனத்தில் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
கோயில்களில் பாதுகாப்பு அதிகரிக்க முடிவு
காஞ்சிபுரம் கோயில் நகரம் என்பதால் காஞ்சிபுரத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் படையெடுப்பது வழக்கமாக உள்ளது. இதனால் காஞ்சிபுரம் கோவில்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் இந்த சோதனைக்கு பொதுமக்கள் அச்சப்படும் வேண்டாம் எனவும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.





















