மேலும் அறிய

Canara Bank Recruitment: ஒப்பந்த அடிப்படை வேலைகளுக்கான, கனரா வங்கியின் அறிவிப்பு

ஒப்பந்த அடிப்படையிலான தலைமை டிஜிட்டல் அதிகாரி பணிக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 30.

தலைமை டிஜிட்டல் அதிகாரிக்கான வேலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது கனரா வங்கி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஜூன் 30 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையிலான தலைமை டிஜிட்டல் அதிகாரி (Chief Digital Officer) பதவிக்கான காலி பணியிடத்தை தனது அதிகாரப்பூர்வ இணையதளமான canarabank.com முகவரியில் வெளியிட்டுள்ளது கனரா வங்கி. தகுதியான நபர்கள் தலைமை டிஜிட்டல் அதிகாரி பதவிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து போஸ்டல் மூலமாக அனுப்பலாம்.

பணிவாய்ப்பு: தலைமை டிஜிட்டல் அதிகாரி (Chief Digital Officer)

விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 30 ஜூன் 2021

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிறைந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்..

கல்வி தகுதி: B.E./ B.Tech மற்றும் MBA மற்றும் திட்ட நிர்வாகத்தில் சான்றிதழ் (Certification in Project Management - PMP)

அனுபவம்: BFSI துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மற்றும் தற்போது ஸ்கேல் IV பிரிவு / தலைமை மேலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட அல்லது அதற்கு சமமான பதவியில் பணிபுரிய வேண்டும்.

கனரா வங்கி எவ்வாறு தேர்வு செய்யும் : 

ஆவணங்கள் / சான்றிதழ்கள் / சான்றுகள், ஒரு நபரின் தகுதி /போஸ்ட் குவாலிஃபிகேஷன் அனுபவத்தை உறுதிப்படுத்தவதற்கான விண்ணப்பதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ் அடிப்படியில் அடிப்படையில் தேர்வு நடைபெறும். இறுதி தேர்வு நேர்முகத்தேர்வில் குறிப்பிட்ட நபரால் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும்.

கனரா வங்கி பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

1. முதலில் விண்ணப்பிக்க விரும்புவோர் கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.canarabank.com சென்று, பின் Careers --> Recruitment பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அதில் Recruitment Project - 1/2021 - Chief Digital Officer on Contract Basis (ரெக்ரூட்மென்ட் ப்ராஜெக்ட்- 1/2021 - ஒப்பந்த அடிப்படையிலான தலைமை டிஜிட்டல் அதிகாரி) என்ற லிங்கை கிளிக் செய்து குறிப்பிட்ட இந்த பதவிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் தேவையான விவரங்களை டவுன்லோட் செய்து, விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஒட்டப்பட்டு விண்ணப்பதாரர் கையொப்பம் போட வேண்டும். கூடவே அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான தகுதியை நிரூபிக்கும் வகையில் ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்களை (self attested photo copies of documents ) இணைக்க வேண்டும்.
3. மேற்கூறியபடி முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆவணங்களின் நகல்களுடன் (சுய சான்றளிக்கப்பட்ட) Application for Chief Digital Officer on Contract Basis என்று கவரின் முன் பகுதியில் குறிப்பிட்டு ரிஜிஸ்டர்ட் போஸ்ட் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் வங்கியின் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

அனுப்பவேண்டிய முகவரி :

The Senior Manager Canara Bank Recruitment Cell,
H R Wing Head Office,
112, J C Road,
Bengaluru - 560002

விண்ணப்ப கட்டணம்:

எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூபிடி / பெண்கள் ஆகியோருக்கு ரூ .118 / - (அறிவிப்பு கட்டணம் மட்டுமே; ஜிஎஸ்டி 18% அடங்கும் )

மற்ற அனைவரும் - ரூ. 1180 / - (ஜிஎஸ்டி 18% அடங்கும்)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget