மேலும் அறிய

CAG Report | தமிழ்நாடு மின்சாரத் துறையில் இழப்பு எத்தனை கோடி? சிஏஜி அறிக்கை சொல்வது என்ன?

தவறான நிர்வாகம் மற்றும் காலதாமதமாக எடுக்கப்பட்ட சில முடிவுகளால் 2013 முதல் 2018 இடையே தமிழ்நாடு மின்சாரத் துறையில் ரூ .5,115.59 கோடி வரை தேவையற்ற செலவீனங்கள் ஏற்பட்டுள்ளது - சிஏஜி அறிக்கை

சட்டப்பேரவையில், 2019ம் ஆண்டுக்கான கணக்குத் தணிக்கை அறிக்கையை தமிக்நாடு அரசு நேற்று தாக்கல் செய்தது. 2013 முதல் 2018 வரை தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததன் மூலம் தமிழ்நாடு மின்சாரத் துறையில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.   

2018ம் ஆண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், தனது 60 சதவித செலவீனங்களை மின்சாரக் கொள்முதலுக்காக மட்டும் பயன்படுத்தியுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2013-14ல் தனியார் துறையிடம் இருந்து 24,164.84 மில்லியன் யூனிட் மின்சாரத்தை ரூ.11,873.37 கோடிக்கு வாங்கிய நிலையில், 2017-18ல் 29,758.38 மில்லியன் யூனிட் மின்சாரத்தை 3,13,564.33 கோடிக்கு கொள்முதல் செய்துள்ளது. 

CAG Report | தமிழ்நாடு மின்சாரத் துறையில் இழப்பு எத்தனை கோடி? சிஏஜி அறிக்கை சொல்வது என்ன?  

தனியார் நிறுவனத்திடம் இருந்து மின்சார கொள்முதல் அதிகரிப்பதற்கு மூன்று அடிப்படைக் காரணங்களையும் சிஏஜி எடுத்துரைத்துள்ளது.            

  1. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மரபு சார்ந்த எரிசக்தி ஆதாரங்களின் மூலம் மின்நிறுவு திறனை அதிகரிக்கவில்லை 
  2. பகிர்மானக் கழகத்தின் நீர் மின் திட்டங்கள்,  அனல் மின் திட்டங்கள், எரிவாயு மின் திட்டங்களின் செயலற்ற தன்மை
  3. மத்திய அரசின் மின் திட்டங்களில் ஏற்பட்டுள்ள காலதாமதம் 

தவறான நிர்வாகம் மற்றும் காலதாமதமாக எடுக்கப்பட்ட சில முடிவுகளால் 2013 முதல் 2018 இடையே தமிழ்நாடு மின்சாரத் துறையில் ரூ .5,115.59 கோடி வரை தேவையற்ற செலவீனங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  நீண்ட கால மின்சார ஒப்பந்தம் செய்யப்பட்ட 8 தனியார்  நிறுவனங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மின்சாரத்தை வழங்கவில்லை. இதற்கான நஷ்டஈடையும் தமிழ்நாடு மின்சாரத் துறை கேட்டுப்பெற முயற்சிக்கவில்லை. ஆனால், மூன்றாவது ஆண்டில் இருந்து அன்றைய சந்தை மதிப்பு யூனிட்டுக்குப் பதிலாக, ஒப்பந்தம் போடப்பட்டபோது நிர்ணையிக்கப்பட சந்தை மதிப்பின் அடிப்படையில் மின்சாரத்தை வாங்கியுள்ளது. இதனால், தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.1,116.04 கோடியாகும்.   

மத்திய அரசின் மின்உற்பத்தி திட்டங்களில் ஏற்பட்ட காலதாமதத்தால் தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு 2,381.54 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மின்தட்டுப்பாடை ஈடுசெய்ய  கூடுதலாக ரூ.2,099.48 கோடிக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளது.   


CAG Report | தமிழ்நாடு மின்சாரத் துறையில் இழப்பு எத்தனை கோடி? சிஏஜி அறிக்கை சொல்வது என்ன?

மிகக் குறைந்த மெரிட் ஆர்டர் டிஸ்பாட்ச் (எம்ஓடி) உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும், நாப்தா அடிப்படையிலான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால், தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு ரூ .3,493.74 கோடியைச் செலவிட வேண்டியிருந்தது.

மேலும், உரிய நேரத்தில் ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் செயல்முறையை பின்பற்றாத காரணத்தினால், தினசரி பற்றாக்குறையின் அடிப்படையில் மின்சாரத்தை வாங்கியது. இதன் விளைவாக, மின்சாரத் துறைக்கு கூடுதலாக ரூ.139.48 கோடி செலவாகியது. ஒப்பந்தத்தை உரிய நேரத்தில் புதுப்பித்திருந்தால் இத்தகைய  செலவீனங்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்தது. 

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை தொடங்க உற்பத்தியாளர்களுக்கு அளித்த காலஅவகாசம் காரணமாக,  மின் உற்பத்தி கழகம் அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தது.  இதன் விளைவாக ரூ .605.48 கோடி அதிகமாக செலவிடப்பட்டதாக சிஏசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
Embed widget