மேலும் அறிய

புறநகரில் பிளாட் வாங்குபவரா நீங்கள் ? இந்த ஆபத்துகளைத் தவிர்க்க இதுவே வழி

பெரிய மனைகளுக்கு நடுவில் அமைந்துள்ள சிறிய மனையை வாங்கினால் , பிற்காலத்தில் அதில் வீடு கட்டுவது தொடர்பாக பிரச்னை ஏற்படும்

காலி மனை வாங்குவதில் மக்கள் ஆர்வம்

சொந்த ஊரை விட்டு வெளியூரில் வேலைக்காக குடியேறியவர்களில் பலர் , புதிய ஊரில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இவ்வாறு , புதிய ஊரில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் , அங்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.

தற்காலிக ஏற்பாடாக வாடகை வீடுகளில் வசிக்கும் பலரும், புதிய ஊரில் சொந்த வீடு வாங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கின்றனர். ஆனால் , சென்னை போன்ற நகரங்களில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் , அதற்கு ஏற்ற நிதி வசதி அடிப்படை தகுதியாக பார்க்கப்படுகிறது.

இதனால் , குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினரால் சொந்த வீடு வாங்க முடியாத அளவுக்கு நிலைமை சென்று விடுகிறது. இத்தகைய சூழலில், மக்கள், நகரின் பிரதான பகுதிகளை தவிர்த்து புறநகர் அல்லது அதற்கு அப்பால் அடுத்த மாவட்டங்களில் காலி மனை வாங்குவதில் கவனம் செலுத்துகின்றனர். இதன்படி , காலிமனை வாங்கும் போது அதற்கான அங்கீகாரம், உரிமை தொடர்பான ஆவணங்கள் குறித்த முழுமையான ஆய்வு அவசியமாகிறது.

சிறிய மனை - வீடு கட்டுவதில் சிக்கல்

முறையான அங்கீகாரம் , வில்லங்கம் இல்லாத பத்திரம் போன்ற விஷயங்களில் ஆய்வு செய்து தெளிவு பெற்ற நிலையில், மனையின் அமைப்பு சார்ந்த விஷயங்களையும் மக்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் , மனை முறையாக அங்கீகரிக்கப்பட்ட லே அவுட்டில் அமைந்துள்ளதா என்பது தொடர்பான விஷயங்களை பாருங்கள்.

முறையான லே அவுட் என்றால் , ஒரு வரிசையில் அனைத்து மனைகளும் ஒரே மாதிரி அமைந்து இருக்கும். ஆனால் , சில இடங்களில் வீட்டு மனை வகைப் பாட்டில் உள்ள பெரிய நிலத்தின் ஒரு பகுதியை வைத்துள்ளவர் அதை விற்க முன் வரலாம்.

இத்தகைய சூழலில், நீங்கள் வாங்கும் மனை இரண்டு பெரிய மனைகளுக்கு நடுவில் மிக சிறியதாக அமைந்துள்ளதா என்று பாருங்கள். இவ்வாறு, பெரிய மனைகளுக்கு நடுவில் அமைந்துள்ள சிறிய மனையை வாங்கினால் , பிற்காலத்தில் அதில் வீடு கட்டுவது தொடர்பாக பிரச்னை ஏற்படும்.

குறிப்பாக, பக்கத்தில் உள்ள மனையில் பெரிய அளவிலான குடியிருப்பு கட்டும் போது, உங்கள் மனைக்கு பிரச்னைகள் ஏற்படும். பெரிய மனைகளில் அதிக உயரத்துக்கு கட்டடங்கள் கட்டப்படும் நிலையில், உங்கள் மனையில் அஸ்திவாரம் போட்டு சாதாரண கட்டடம் கட்டுவதானாலும் , பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

இது மட்டுமல்லாது , பெரிய மனைகளை வாங்குவோர் , உங்கள் மனையை குறைந்த விலைக்கு வாங்க நெருக்கடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய மனைகளை வாங்கும் போது எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. குறிப்பாக, அந்த பகுதியில் சாலை விரிவாக்கம் போன்ற திட்டங்கள் வந்தால், அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள். 

Advertisement

தலைப்பு செய்திகள்

தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Thalapathy Vijay: 25 வருஷத்துக்கு முன்னாடியே அப்படியா?.. தங்க மோதிரம் போடும்போது கண் கலங்கிய விஜய்!
Thalapathy Vijay: 25 வருஷத்துக்கு முன்னாடியே அப்படியா?.. தங்க மோதிரம் போடும்போது கண் கலங்கிய விஜய்!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
Embed widget