மேலும் அறிய

தாய்ப்பால் எப்போது, எப்படி கொடுக்க வேண்டும்? சுரப்பை அதிகரிப்பது எப்படி? இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

குழந்தை பிறந்ததில் இருந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பாலைத் தவிர, தண்ணீர் உட்பட வேறு எந்த உணவையும் கொடுக்கத் தேவையில்லை.

தாய்ப் பால் உயிர்ப் பால்

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. தாய்ப் பால் பச்சிளம் குழந்தைகளின் உயிர்ப் பால் என்பதை அறிந்தே ஐ.நா. குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது.

நோய் எதிர்ப்பு சக்தி

குழந்தை பிறந்த உடன், தாய்க்கு மஞ்சள் நிறத்தில் சுரக்கும் பால் கொலஸ்ட்ரம் (colostrum) என்று அறியப்படுகிறது. இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்ப் பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்தாலும் கொலஸ்ட்ரோம் ஏராளமான சத்துகளை உள்ளடக்கி இருக்கிறது.

தண்ணீர் கூட வேண்டாம்; தாய்ப்பால் மட்டுமே போதும்

குழந்தை பிறந்ததில் இருந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பாலைத் தவிர, தண்ணீர் உட்பட வேறு எந்த உணவையும் கொடுக்கத் தேவையில்லை. தாய்க்குப் போதிய தாய்ப் பால் இல்லாத பட்சத்தில் வேண்டுமானால், வேறு இணை உணவுகளைக் கொடுக்கலாம். ஆனாலும் தாய்ப் பாலை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

தாய்ப்பால் எப்போது, எப்படி கொடுக்க வேண்டும்? சுரப்பை அதிகரிப்பது எப்படி? இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

எப்போது, எப்படி தாய்ப்பால் கொடுக்க பேண்டும்?

தாயின் உடல் நிலையைப் பொறுத்து, குழந்தை பிறந்த உடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்திருந்தால், பிறந்து 2 மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது, ஒரு தாய் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு பாலூட்ட வேண்டும். மன அழுத்தத்திலோ, கோபத்திலோ குழந்தைக்கு பாலூட்டும்போது தாய்ப்பாலின் அளவு குறையும் என்றும் கூறப்படுகிறது.

தாய்ப் பால் கொடுத்ததும் என்ன செய்ய வேண்டும்?

தாய்ப்பால் கொடுத்த பின்பு, குழந்தையைத் தூக்கி, முதுகுப் பக்கத்தில் மெதுவாக கீழ்நோக்கித் தடவிக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் குடித்த தாய்ப்பால் எதுக்களித்து வாய் வழியாக மீண்டும் வருவது தவிர்க்கப்படும்.  குழந்தைக்கு வாந்தி ஏற்படுவதை தவிர்க்கும்.

தாய்ப் பால் சுரப்பை அதிகரிப்பது எப்படி?

சரியான உணவு, நீர், போதிய உறக்கம், மகிழ்ச்சியான மனநிலை ஆகியவை சிறப்பான தாய்ப்பால் சுரப்புக்கு முக்கியம். முக்கியமாக தினந்தோறும் 3 லிட்டர் தண்ணீரையாவது அருந்த வேண்டும். காலையும் இரவும் தாய்மார்கள் பால் அருந்தலாம். சுரை, புடலை, பீர்க்கன் உள்ளிட்ட நாட்டு, நீர்க் காய்களை எடுத்துக்கொள்வது உடலில் நீரின் அளவைத் தக்க வைக்கும். அதன் மூலம், தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும். மாதுளை மணப்பாகு, செளபாக்ய சுண்டி லேகியம், சதாவரி லேகியம் உள்ளிட்ட சித்த மருந்துகளையும் உட்கொள்ளலாம்.

தாய்ப்பால் எப்போது, எப்படி கொடுக்க வேண்டும்? சுரப்பை அதிகரிப்பது எப்படி? இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

தாய்ப்பாலை சேமிக்கலாமா?

தாய்ப்பாலை உடனுக்குடன்தான் கொடுக்க முடியும் என்று நிறையப் பேர் நினைக்கின்றனர். ஆனால் அதைச் சேமித்து வைத்தும் கொடுக்கலாம். வேலைக்குச் செல்லும் தாய்கள் தாய்ப்பாலை எடுத்து, புட்டியில் நிரப்பிவைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கச் சொல்லலாம். நன்றாக கழுவி, சுத்திகரிக்கப்பட்ட பாத்திரத்தில் நிரப்பி வைக்கப்படும் தாய்ப் பாலை சாதாரண வெப்பநிலையில் 8 முதல் 10 மணிநேரமும், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது 18 முதல் 24 மணிநேரமும் வைத்துக் கொடுக்கலாம்.

தாய்ப்பால் தானம்

குழந்தைக்கு அளித்ததுபோக மீதமுள்ள பாலை, தாயை இழந்த/ தேவையுள்ள குழந்தைகளுக்கு தானமாக அளிக்கலாம். தாய்ப்பால் ஊட்டுவதில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க, தமிழ்நாடு அரசு சார்பில் 95664 41156 என்ற உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதையும் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget