மேலும் அறிய

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்த பொம்மன், பெள்ளி ; மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய குடியரசு தலைவர்!

மசினகுடி சந்திப்பு பகுதியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை காண்பதற்காக காத்திருந்த பொது மக்களை பார்த்த, அவர் காரில் இருந்து இறங்கி வந்து பொதுமக்களை சந்தித்தார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்குட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர்களாக இருந்து வரும் பொம்மன், பெள்ளி தம்பதியினரின் வாழ்க்கை குறித்த எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படமான ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்குட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர்களாக இருந்து வரும் பொம்மன், பெள்ளி தம்பதியினரின் வாழ்க்கை குறித்த எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படமான ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது. பழங்குடிகளின் வாழ்வியலையும், அவர்களுக்கும் யானைகளுக்கும் இருக்கும் உறவையும் மிகவும் உணர்வுப்பூர்வமாக அந்த ஆவணப்படம் பதிவு செய்திருந்தது. இந்த படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் சிறந்த ஆவணப்படம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியது.

இன்னொரு சுவாரஸ்யம் இதோ இருக்கு:

Karuththarajapalayam: கான்க்ரீட் வீடு வேணாம், உசுறுதான் முக்கியம்.. படிகட்டுக்கு நோ, தச்சர்களே இல்லாத கருத்தராஜபாளையம் - சாமி குத்தம்னு பதறும் மக்கள்

இதையடுத்து அப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளி ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மன், பெள்ளி ஆகியோரை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து, பாராட்டு கேடயமும், தலா ஒரு இலட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதேபோல யானை பாகன்களுக்கு நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களுக்காக குடியிருப்பு கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இதனைத்தொடந்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் முதுமலை யானைகள் முகாமிற்கு வருகை தந்து, பொம்மன், பெள்ளி தம்பதியினரை சந்தித்து உரையாடினார்.

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்த பொம்மன், பெள்ளி ; மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய குடியரசு தலைவர்!

இந்நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி பகுதிக்கு வருகை புரிந்தார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்றடைந்தார். அங்கு இருந்த வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகள் ஊட்டி மகிழ்ந்த திரெளபதி முர்மு, பொம்மன், பெள்ளி தம்பதியினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து கார் மூலம் மீண்டும் மசினகுடி ஹெலிகாப்டர் தளத்திற்கு காரில் வருகை தந்தார்.

அப்போது மசினகுடி சந்திப்பு பகுதியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை காண்பதற்காக காத்திருந்த பொது மக்களை பார்த்த, அவர் காரில் இருந்து இறங்கி வந்து பொதுமக்களை சந்தித்தார். மேலும் மக்களுடன் கைகுலுக்கிய திரெளபதி முர்மு, இனிப்புகளையும் வழங்கினார். அப்போது அனன்யா விஸ்வேஸ் என்ற 11 வயது மாணவி பறவைகள் குறித்து  எழுதிய புத்தகம் ஒன்றை குடியரசுத் தலைவருக்கு நேரில் வழங்கி வாழ்த்து பெற்றார். இது தன் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என சிறுமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மசினகுடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மைசூருக்கு அவர் புறப்பட்டு சென்றார். பின்னர் தனி விமான மூலம் சென்னை செல்லும் குடியரசுத் தலைவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். குடியரசுத் தலைவரின் வருகைய ஒட்டி நீலகிரி மாவட்டம் கூடலூர் மசினகுடி முதுமலை தெப்பக்காடு மாயாறு போன்ற பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
Embed widget