மேலும் அறிய

Vinoj P Selvam: கருணாநிதி ஏரியாவில் இருக்கும் கோபாலபுரம் மைதானம்.. குரல் கொடுத்த பாஜக நிர்வாகி! என்ன சம்பவம்?

சென்னை கோபாலபுரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் தினமும் குறைந்தது 100 பேர் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள்.

கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், மீண்டும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்யும் இடமாக அதனை மாற்றித் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 

சென்னை கோபாலபுரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் தினமும் குறைந்தது 100 பேர் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள். அதுவும் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்காக இருக்கும்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என பலரும் இங்கு தினமும் விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக மெட்ரோ ரயில் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கற்கள் உள்ளிட்ட பொருட்களை கொட்டும் இடமாக கோபாலபுரம் விளையாட்டு மைதானம் மாற்றப்பட்டுள்ளதால் அங்கு விளையாட முடியாமல் வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கோபாலபுரம் மைதானத்திற்கு சென்று ஆய்வு செய்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், இந்த மைதானம்  பணம் செலுத்தி விளையாட முடியாத ஏராளமானோருக்கு வரபிரசாதமாக இருந்து வந்த நிலையில், அதனை கெடுக்கும் வகையில் திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் ஆயிரம் விளக்கு சட்ட மன்ற திமுக உறுப்பினர் மருத்துவர் எழிலன் இந்த கோபாலபுரம் மைதானத்தில் பாக்ஸிங் மையம் அமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலோட்டமாக பார்த்தால், நல்ல முயற்சி போன்று இது தெரிந்தாலும் இந்த பாக்சிஸ் மையம் கட்டியபின் அதனை தனியாருக்கு தாரை வார்த்து சாமானியர்கள் பயிற்சி செய்ய முடியாத இடமாக இந்த இடத்தை மாற்றும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

கோபாலபுரத்தை சென்று ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவருக்கு இங்கு கட்டப்படும் பாக்ஸிங் மையத்தை தாரை வார்க்கும் முயற்சிகள் நடந்து வருவதாக வினோஜ் பி செல்வம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். அப்படி நடந்த சாமானியர்களின் பிள்ளைகள் இங்கு விளையாட முடியாத சூழல் ஏற்படும் என்றும் சந்தா கட்டும் வசதி உள்ளோர் மட்டும் பயிற்சி பெறும் இடமாக கோபாலபுரம் மைதானம் ஆகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

உதாரணமாக, நுங்கம்பாக்கத்தில் அரசு செலவில் கட்டப்பட்ட டென்னிஸ் மைதானம் தற்போது தனியார் கிளப் போல ஆகிவிட்டதை குறிப்பிட்டுள்ள வினோஜ் பி செல்வம், அது போன்ற நிலை கோபாலபுரம் மைதானத்திற்கு வரகூடாது என்றும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பாஜக அதனை எதிர்த்து போராட்டு என்றும் வினோக் அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத கோபாலபுரம் மைதானத்தில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாகவும் விளையாட்டு மைதானத்தில் இருந்த இளைஞர்களிடம் வினோஜ் பி செல்வம் உறுதி அளித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget