மேலும் அறிய

‛இல்லம் செல்வோம்... உள்ளம் வெல்வோம்’ அண்ணாமலையின் முதல் ‛புராஜெக்ட்’ !

பாஜகவை வளர்க்கும் விதமாக 'இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" என்ற பிரசார இயக்கத்தை புதிய மாநில தலைவர் அண்ணாமலை கட்சியினருக்கு அறிவித்துள்ளார்.

தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்திய அளவில் பல மாநிலங்களில் தங்களது கட்சியை வளர்த்து நிலை நாட்டி இருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் மட்டும் பாரதிய ஜனதா கட்சியால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கட்சி பெரிய வளர்ச்சி அடையவில்லை. இதனை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை கூட்டணி கட்சிகளின் ஆதரவின்றி தனித்து தனித்துவத்துடன் கொண்டுவர முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்கிய பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு, அவர் வகித்த தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் பதவியினை காவல்துறை அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலைக்கு வழங்கியுள்ளது. மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை தமிழ்நாட்டில் கட்சியினை பெரிய ஒரு அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதனை அடுத்து பல்வேறு திட்டங்களையும் வியூகங்களையும் மத்திய பாரதிய ஜனதா கட்சி வகுத்து வைத்துள்ளதாகவும், முதற்கட்டமாக "இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" என தலைப்பிட்டு ஒரு திட்டத்தினை கட்சியை வளர்ப்பதற்காக கட்சியினரிடையே அறிவித்துள்ளனர்.

‛இல்லம் செல்வோம்... உள்ளம் வெல்வோம்’ அண்ணாமலையின் முதல் ‛புராஜெக்ட்’ !

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 'இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" என்ற தலைப்பில் பொது மக்களை சந்தித்து கட்சியை வளர்க்கவும், மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும், அனைத்து பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவ்வகையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இத்திட்டத்திற்கான மாநில பொறுப்பாளராக, மாநில துணைத் தலைவர் கருப்பு.முருகானந்தம், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளராக மாநில செயலாளர் தங்க.வரதராஜன் ஆகியோரை நியமித்துள்ளார்.

‛இல்லம் செல்வோம்... உள்ளம் வெல்வோம்’ அண்ணாமலையின் முதல் ‛புராஜெக்ட்’ !

இந்நிலையில், மயிலாடுதுறையில் இத்திட்டம் குறித்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கும் வகையில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்த  இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் கருப்பு.முருகானந்தம் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய கருப்பு.முருகானந்தம், ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கும் இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்"  இத்திட்டத்தில் அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் பங்கேற்று, மாநில செயலாளர் தங்க.வரதராஜன் வழிநடத்துதலின்பேரில் செயல்பட்டு, அனைத்து பொதுமக்களையும் வீடு வீடாக சென்று சந்தித்து, பாரத பிரதமர் மோடியின் திட்டங்களை விளக்கி, கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி‌.சேதுராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தலைப்பு செய்திகள்

பட்டியலின மக்களின் நலனுக்காக வசதிகள்.. பராமரிப்புக்கு திட்டம் உண்டா? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
பட்டியலின மக்களின் நலனுக்காக வசதிகள்.. பராமரிப்புக்கு திட்டம் உண்டா? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
Farmer subsidy: தமிழ்நாட்டில் 22 மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கு.. 100% மானியத்தில் உதவிகள்! என்னென்ன தெரியுமா?
Farmer subsidy: தமிழ்நாட்டில் 22 மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கு.. 100% மானியத்தில் உதவிகள்! என்னென்ன தெரியுமா?
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget