"பீர் பாட்டிலுடன் பிரியாணி விருந்து - திமுக கூட்டத்தில் அதிர்ச்சி” இதுதான் மதுஒழிப்பா..?
திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பீர் உடன் பிரியாணி விருந்து

கள்ளக்குறிச்சி: திமுக ஆய்வு கூட்டத்திற்கு பின் மதுவுடன் கூடிய அசைவ விருந்து, புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானதால் பரபரப்பு.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், திமுக ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பெறுநர்கிள்ளி ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு தேர்தல் குறித்தும் வாக்குச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.
பீர் பாட்டிலுடன் பிரியாணி - ருசித்து சாப்பிட்ட திமுக இளைஞர்கள்
கூட்டம் முடிந்து சட்டமன்ற உறுப்பினரும் தொகுதி பொறுப்பாளரும் சென்ற பிறகு 3 ஒன்றிய செயலாளர்கள் மூலமாக வந்திருந்த வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோருக்கு மதுவுடன் (பீர் பாட்டிலுடன்) கூடிய அசைவ விருந்து வைக்கப்பட்டுள்ளது.
சாப்பாட்டு மேஜையின் மீது இலையுடன் ஆளுக்கு ஒரு பீர் பாட்டில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கும் காட்சிகள், புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மது ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை முன்னிறுத்தி பேசி வருகிறது. திமுக ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிணைந்து தனியார் திருமண மண்டபத்தில் இளைஞர்களுக்கு மதுவுடன் கூடிய அசைவ விருந்து வைத்த சம்பவம் அனைவரிடமும் பேசுபொருளாய் மாறி உள்ளது.
தூக்கம் வரவில்லை என்று புலம்பிய முதல்வருக்கு மேலும் சோதனை
நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது. என் உடம்பை பாருங்கள். உங்களது செயல்பாடுகள் கழகத்துக்கும் - உங்களுக்கும் பெருமை தேடித் தருவது போல அமைய வேண்டுமே தவிர சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது. பொது நன்மைக்காக மட்டுமே இதனை நான் சொல்லவில்லை, உங்களது நன்மைக்காகவும் சேர்த்தே சொல்கிறேன். பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக கழகம் பழிகளுக்கும் ஏளனத்துக்கும் ஆளானது என்று நொந்துபோய் பேசியிருந்தார். இப்படி பல முறை பேசியும் மூத்த தலைவர்கள் சிலர் அதை கேட்கவில்லை. இப்போது இனிமேல் இப்படி பேசுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று உணர்த்தும் விதமாக பொன்முடியின் அமைச்சர் பதவியும் நீக்கப்பட்டு உள்ளது. இப்போது திமுக இளைஞர்களும் முதல்வருக்கு மேலும் மேலும் துன்பத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி:திமுக இளைஞர் அணி கூட்டத்தில் மது உடன் விருந்து அளிக்கப்பட்டதாக புகார் - இணையத்தில் வைரலாகும் போட்டோhttps://t.co/wupaoCzH82 | #Kallakurichi #DMK #Tamilnadu #Tamilnews #ABPNadu pic.twitter.com/5LO6VuFOUw
— ABP Nadu (@abpnadu) April 28, 2025
மதுவால் - இளம் விதவைகள் - கனிமொழி கண்ணீர்
தமிழ்நாட்டில் மது பழக்கத்தால் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது என்றும் மதுக் கடைகளை மூட வேண்டும் என்றும் அதிமுக ஆட்சியில் அறைகூவல் விடுத்த திமுக பொதுச்செயலாளர் கனிமொழி இப்போது எங்கே இருக்கிறார்? என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் அதிமுகவினர் எழுப்பி வருகின்றனர். மேலும், இதுதான் திமுகவின் மது ஒழிப்பு கொள்கையா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.





















