மேலும் அறிய

குரூர புத்தியா?- எல்லை மீறி புண்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகள்... என்ன செய்யலாம்?

வெகுஜன மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமா, அரசியல் போன்ற துறைகளில் நகைச்சுவை என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து உருவ கேலி செய்யப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

வெகுஜன மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமா, அரசியல் போன்ற துறைகளில் நகைச்சுவை என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து உருவ கேலி செய்யப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் இன்று நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ''உலகில் எந்த நாட்டில் பிரச்சனை என்றாலும் அந்த நாட்டுப் பிரதமருடன் மோடி பேசும்போது, நான்கு பக்கத்தில் இருந்தும் விமர்சனங்கள் எழுகின்றன. இதற்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதே இல்லை. மோடியை விமர்சனம் செய்பவர்கள் 3 மாதத்தில் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள். 

3 மாதத்தில் பிறந்த குழந்தைக்குத்தான் வாய், காது இருக்காது. அதேபோல்தான் விமர்சனங்கள் செய்பவர்களுக்கு நல்லது சொன்னால் காது கேட்காது. அதைப்பற்றி பேசவும் மாட்டார்கள்'' என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சங்கங்களும் சமூக ஆர்வலர்களும் இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

குரூர புத்தியா?- எல்லை மீறி புண்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகள்... என்ன செய்யலாம்?

குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, முதல் 28 நாட்கள் தாய்ப்பால் மட்டும் கொடுத்தால் அதிக புத்திசாலித்தனத்துடனும் கணிதத்தில் சிறந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. குறைப் பிரசவம் என்பது இழிவானதல்ல. அப்படிப்பட்டவர்கள் பிறக்கும்போதே போராளிகளாக இருக்கின்றனர். பிறந்ததும் உயிரைத் தக்கவைக்க பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். அவர்களை விமர்சிப்பது ஆரோக்கியமான போக்கல்ல என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. 

மாற்றுத்திறனாளிகளை அரசியலர்கள் விமர்சிப்பது ஒன்றும் புதிதல்ல. 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசை 'செவிடு', 'குருடு' என்று சரமாரியாக விமர்சித்திருந்தார் மோடி. இது கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது.

கடந்த 2017ஆம் ஆண்டு திமுகவில் இருந்த நடிகர் ராதாரவி, அரசியலர்களான அன்புமணி ராமதாஸ், வைகோ உள்ளிட்டோரைக் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிட்டு, 'சப்பாணி' என்று அழைத்தார். மேலும் கைகளை கோணிக்கொண்டு, அந்தக் குழந்தைகளின் நடையைக் கிண்டல் செய்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் ராதாரவி வருத்தம் தெரிவிக்கவில்லை. 

குரூர புத்தியா?- எல்லை மீறி புண்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகள்... என்ன செய்யலாம்?

அதேபோல 2020ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, காங்கிரஸை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்று விமர்சித்திருந்தார். இதற்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில், குஷ்பு வருத்தம் தெரிவித்தார்.

அண்மையில் டிக்கிலோனா திரைப்படத்தில் 'சைடு ஸ்டாண்ட்', 'எஸ்கேப் பைத்தியம்' என்று மாற்றுத்திறனாளிகளைக் கிண்டல் என்ற பெயரில் உருவ கேலி செய்தது பேசுபொருளானது. 

வெகுஜன மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமா, அரசியல் போன்ற துறைகளில் நகைச்சுவை என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து உருவ கேலி செய்யப்படுவது குறித்து டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவரும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வலருமான பேராசிரியர் தீபக் நாதன், 'ஏபிபி நாடு'விடம் பேசினார். 

''அரசியலில் உங்கள் எதிரிகளை  விமர்சிக்க ஏன் ஊனத்தைக் கையிலெடுக்கிறீர்கள்? நாங்கள் இயற்கையின் அங்கமில்லையா?  எங்களுக்கும் மான உணர்ச்சி உண்டு. தொடர்ந்து அரசியல்வாதிகள் புண்படுத்துகிறார்கள். எங்களின் உளவியல், சமூகக் குறைபாடுகளை மதியுங்கள்.

குரூர புத்தியா?- எல்லை மீறி புண்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகள்... என்ன செய்யலாம்?
பேராசிரியர் தீபக் நாதன்

மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் படும் வலிகளை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. ஆட்டிசம் உள்ளிட்ட மனவளர்ச்சிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் சமூகத்தில் ஏளனத்தையும் கேலியையுமே எதிர்கொள்கின்றனர். 

இத்தகைய குழந்தைகளை நீங்கள் அடித்தால், அவர்கள் வலி தாங்க முடியாமல் ஓவென அழுவார்கள். ஆனால் அவர்களுக்குத் திருப்பி அடிக்கத் தெரியாது. அவர்களைக் கிண்டல் செய்வது எந்த வகையில் நியாயம்? இத்தகைய குழந்தைகளைப் பெற்றுவிட்டோம் என்று அதன் தாயைக் குடும்பமும் சமூகமும் சேர்ந்து நசுக்குவது உங்களுக்குத் தெரியுமா?. மன வளர்ச்சி குன்றிய குழந்தையைத் தன்னுடைய குழந்தை என்று எத்தனை அப்பாக்கள் வெளியில் சொல்கின்றனர்? 

ஒரு வழக்கமான குழந்தையைப் பெற்றடுத்து, பாதுகாப்பாக வளர்க்கவே சமூகத்தில் எத்தனை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது? இதில் சிறப்புக் குழந்தைகளை வளர்ப்பதில் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தெரிந்தால் இப்படிப் பேசுவார்களா?

அத்தனை அழகாய் இருக்கும் அந்தக் குடும்பமும் பெண்ணும், சிறப்புக் குழந்தை பிறந்தபிறகு நிலைகுலைந்து போவதைக் கண்கூடாய்க் கண்டிருக்கிறேன். ஒரு நாள் ஆக்குபேஷனல் தெரபிக்கு குறைந்தது ரூ.500 செலவாகும். மருத்துவச் செலவு, சிறப்புப் பள்ளிகளில் கல்விச் செலவுக்குப் பணம் வேண்டும். ரயிலில் பயணிக்க முடியாது. உறவினர் இல்ல விழாக்களில் கலந்துகொள்ள முடியாது. வாடகை வீடு கிடைக்காது. கோயிலுக்கு, சூப்பர் மார்க்கெட்டுகளுக்குச் செல்ல முடியாது என மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு ஒன்றா, இரண்டா எத்தனை பிரச்சினைகள்? எதை நான் சொல்வது? மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு உணர்ச்சிகள் இருக்காதா? உரிமைகள் கிடையாதா?

உங்களுக்கு அரசியலில் நன்றாக வர வேண்டும் என்பதற்காகவும் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்துவதற்காகப் பேசுவதும் குரூர புத்தி. மானுடத் தன்மையற்ற செயல். இவ்வாறு பேசுவதால் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான கருத்துகள் வலுப்பெறும். எங்களைக் கொச்சைப்படுத்துகிற, அவமானத்தின் சின்னமாகப் பார்க்கும் கருத்து வளர்ந்துவிடும். அதனால்தான் இதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றுகிறோம். இல்லையெனில் குனிய, குனிய அடிப்பார்கள்.

குரூர புத்தியா?- எல்லை மீறி புண்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகள்... என்ன செய்யலாம்?

கட்சி வேறுபாடில்லாமல் மாற்றுத் திறனாளிகளை கேலி செய்கிறீர்கள். அலங்காரத்துக்காக மாற்றுத் திறனாளிகளைப் புகழ வேண்டாம். பிரதமர் மோடி, திவ்யாங் ஜன் (தெய்வ அம்சம் கொண்ட உடலைப் பெற்றவர்கள்) என்று பெயர் மாற்றம் செய்தார். ஆனால் அண்மையில்தான் தமிழ்நாட்டில் ரயில் பெட்டிகளைப் பூட்டி வைத்துவிட்டு மாற்றுத் திறனாளிகளை ஏற விடாத அவலம் நடைபெற்றது. 

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2014, பிரிவு 92(a)-ன்படி, எங்களைக் கிண்டல் செய்வது சட்டப்படி குற்றம். மனித உரிமைகளை மீறும் செயல்.

எப்படித் தடுக்கலாம்?

ஊடகங்கள், கட்டுரையாளர்கள், படைப்பாளர்கள் மாற்றுத் திறனாளிகளின் வலியைப் பற்றி அதிகம் பேச வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லாமல், எல்லோருமே சரியான புரிதலோடு செயலாற்ற வேண்டும். திருநங்கைகளைப் பார்க்கும் பார்வை மாறி இருப்பதைப்போல, மாற்றுத்திறனாளிகள் மீதான பார்வையும் மாற வேண்டும்'' என்று பேராசிரியர் தீபக் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget