திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து.. பயணிகளுக்கு என்னாச்சு?
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. 2 பெட்டிகளில் தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா நோக்கி சென்ற பயணிகள் விரைவு ரயில் திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. 2 பெட்டிகளில் தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ரயில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது. கடந்தாண்டு, கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருவள்ளூர் அருகே ரயில் விபத்து:
கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் தேதி, ஆந்திர பிரதேசம் விழியநகரத்தில் நடத்த ரயில் விபத்தில் 14 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு 12 நாள்களுக்கு முன்புதான், பிகார் பக்சர் மாவட்டத்தில் நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி 4 பேரின் உயிரை காவு வாங்கியது. இறப்புகள் ஏற்படாத ரயில் விபத்துகள் பல கடந்தாண்டு நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. ரயில் பெட்டியில் தீப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதேனும் நடந்ததா என்பது குறித்து தெரியவில்லை.
பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.