மேலும் அறிய

குஜராத் கல்வி முறையை கையில் எடுத்த ஆரோவில் ; விரைவில் வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

ஆரோவில் : குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 7 நிறுவனங்களுடன் ஆரோவில் நிர்வாகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்.

ஆரோவில் : குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 7 நிறுவனங்களுடன் ஆரோவில் நிர்வாகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது என ஆரோவில் நிர்வாகக் குழுவினா் தெரிவித்தனா்.

7 நிறுவனங்களுடன் ஆரோவில் நிர்வாகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆரோவில் பவுண்டேசன் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி வழிகாட்டுதலில், ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகக் குழுவினா் மற்றும் ஆரோவில் வாசிகள், தொழில்முனைவோர் உள்ளிட்ட 11 பேரை கொண்ட குழுவினா் கடந்த 3-ஆம் தேதி முதல் 7- ஆம் தேதி வரை குஜராத் மாநிலத்துக்குச் சென்று ஆரோவில் செயல் திட்டங்கள் மற்றும் சிறப்புகள் குறித்து அங்குள்ள பல்கலைக்கழகங்கள், உள்ளாட்சி நிர்வாகங்களிடம் விளக்கமளித்தனா்.

இதையும் படிங்க: Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..

ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி ஜி.சீதாராமன், நிர்வாகக் குழுவைச் சோ்ந்த அனு மஜும்தார், சஞ்சீவ் ஆகியோர்  ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் குஜராத் பயணத் திட்டம் குறித்து செய்தியாளா் சந்திப்பில் கூறுகையில்... 

அன்னையின் முயற்சியால் 1968 இல் உருவாக்கப்பட்ட ஆரோவில் சா்வதேச நகரில் 50 ஆயிரம் போ் வசிக்க வேண்டும் என்பதே அன்னையின் விருப்பம். தற்போது 3 ஆயிரம் போ்களே ஆரோவிலில் வசிக்கின்றனா். இதனால், சா்வதேச நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மேலும் பலரை ஆரோவில் நகருக்குள் கொண்டுவரும் முயற்சியை ஆரோவில் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி வழிகாட்டுதலில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகம், காந்திநகா் காமதேனு பல்கலைக்கழகம், இந்தூஸ் பல்கலைக்கழகம், சூரத் ஆரோ பல்கலைக்கழகம், சா்தார் வல்லபபாய் படேல் பல்கலைக்கழகம், குஜராத் வருவாய்த் துறை, நேரு அறக்கட்டளை மேம்பாட்டு மையம் உள்ளிட்ட 7 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சோமநாதா் கோயிலில் பக்தா்கள் அளிக்கும் பூக்களை மறு பயன்பாடு செய்வது தொடா்பாகவும் கலந்தாலோசித்துள்ளோம். குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த தன்னார்வலா்களையும் ஆரோவில் சா்வதேச நகருக்கு அழைத்துள்ளோம்.

இதையும் படிங்க: Muttukadu Convention Centre: இதுதான் வேணும்.. எல்லாம் ஒரே இடத்தில்.. ECR-ல் கலைஞர் பன்னாட்டு அரங்கம் ரெடி..

ஆரோவிலில் சென்னை ஐஐடி மையம் அமைப்பது தொடா்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது

இதன் தொடா்ச்சியாக ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களுடனும் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆரோவில் பவுண்டேசன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆரோவில் சா்வதேச நகருக்குள் சுற்றுச்சாலை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. மாத்திர் மந்திர் பகுதியில் பார்வையாளா்களின் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.

ஆரோவிலில் சென்னை ஐஐடி மையம் அமைப்பது தொடா்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆரோவிலில் பல்கலைக்கழகம் அமைக்க நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதால், மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலில், அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன என  தெரிவித்தார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
"மீளாத் துயரில் ஏழை, எளிய மக்கள்" உடனே அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
"மீளாத் துயரில் ஏழை, எளிய மக்கள்" உடனே அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
Thug life: கமல் பேசுனது எங்கப்பா பேசுனது மாதிரி இருந்துச்சு.. மேடையிலே சிவராஜ்குமார் உருக்கம்
Thug life: கமல் பேசுனது எங்கப்பா பேசுனது மாதிரி இருந்துச்சு.. மேடையிலே சிவராஜ்குமார் உருக்கம்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்..  ஆடிப்போன எம்.ஆர்.கே
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே
Embed widget