Archana Patnaik Profile : “2026 தேர்லை நடத்தப்போகும் IAS அதிகாரி” யார் இந்த அர்ச்சனா பட்நாயக்..?
Think Big ; Dream Big என்ற தாரக மந்திரத்துடன் வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒடிசா மாநிலத்தில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆனவர் அர்ச்சனா பட்நாயக்.
தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும்போதே அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டன. அவர்களுக்கு சமமாக இந்திய தேர்தல் ஆணையமும் தன் பங்கிற்கு தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கிறது. அதனுடைய முதல் கட்டமாக தமிழக தேர்தல் தலைமை அதிகாரியாக இருந்த சத்தியபிரதா சாஹூ மாற்றப்பட்டு ,அவருக்கு பதில் அர்சனா பட்நாயக் என்ற பெண் ஐ.ஏ.ஸ் அதிகாரிய நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதல் பெண் CEO அர்ச்சனா பட்நாயக்
இதுவரை தமிழக தேர்தல் அதிகாரியாக ஆண் ஐ.ஏ.ஸ் அதிகாரிகளே இருந்த நிலையில், முதன் முறையாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் என்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போகும் 2026 சட்டமன்ற தேர்தலை புதிதாக பொறுப்பேற்றுள்ள அர்ச்சனா பட்நாயக்கே தலைமையேற்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாட்டில் நடத்தவுள்ளார்.
அர்ச்சனா பட்நாயக்கின் பின்னணி என்ன ?
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு கேடர் ஐ.ஏஎஸ் அதிகாரியாக இருந்து வருகிறார். எப்படி தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற பெயரை தற்போது பெற்றுள்ளாரோ அதே மாதிரி கோவை மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையையும் இவர் ஏற்கனவே பெற்றுள்ளார். நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராகவும் பணி செய்த அனுபவம் பெற்றவர் அர்ச்சனா பட்நாயக்.
தற்போது தமிழ்நாடு சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளராக பணியாற்றி வரும் அர்ச்சனா பட்நாயக் விரைவில் அந்த பொறுப்பில் இருந்துவிடுவிக்கப்பட்டு, தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.
Think Big ; Dream Big என்ற தாரக மந்திரத்துடன் வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒடிசா மாநிலத்தில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆனவர் அர்ச்சனா பட்நாயக்.
இவரின் தலைமையிலேயே 2026 தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஊடகங்களின் பார்வை இப்போது அர்ச்சனா பட்நாயக் வசம் திரும்பியுள்ளது.