மேலும் அறிய

தமிழக அரசுத் துறைகளில் புற்றீசல்‌போல பெருகும் ஆலோசகர் நியமனம்: முற்றிலும் கைவிடக் கோரிக்கை!

ஆரம்பகால கட்டத்தில்‌, சில துறைகளில்‌ மட்டுமே இருந்த இத்தகைய ஆலோசகர்கள்‌ நியமனங்கள்‌ தற்போது அனைத்துத்‌ துறைகளிலும்‌, புற்றீசல்‌ போல பல்கிப்‌ பெருகி விட்டது.

தமிழ்நாடு அரசின்‌ பல்வேறு துறைகளில்‌ மேற்கொள்ளப்பட்டுவரும்‌ ஆலோசகர்கள்‌ நியமனங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச்‌ செயலகச்‌ சங்கம்‌ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கம் தெரிவித்து உள்ளதாவது:

’’2021 ஆம்‌ ஆண்டு மே மாதத்தில்‌ திமுக அரசு பொறுப்பேற்று ஏறத்தாழ 40 மாதங்கள்‌ கடந்துவிட்டது. அரசு ஆட்சிப்‌ பொறுப்பேற்ற நாள்‌ முதற்கொண்டே, துறைகளில்‌ ஆலோசகர்கள்‌ நியமனங்களை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆரம்பகால கட்டத்தில்‌, சில துறைகளில்‌ மட்டுமே இருந்த இத்தகைய ஆலோசகர்கள்‌ நியமனங்கள்‌ தற்போது அனைத்துத்‌ துறைகளிலும்‌, புற்றீசல்‌ போல பல்கிப்‌ பெருகி விட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில்‌ இவ்வாறான நியமனங்கள்‌ இங்கொன்றும்‌ அங்கொன்றுமாக இருந்தது என்றாலும்‌, பெரும்பாலும்‌ இந்திய ஆட்சிப்‌ பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள்‌ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்‌.

ஆனால்‌, தற்போது ஆலோசகர்களின்‌ நியமனங்கள்‌ எந்தவித வரைமுறையும்‌ இன்றி செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல இவர்களின்‌ ஊதிய நிர்ணயத்திற்கு எந்த வழிகாட்டுதலும்‌ பின்பற்றப்படுவதில்லை.

இந்த ஆலோசகர்கள்‌ நியமனத்தில்‌ தமிழ்நாடு தலைமைச்‌ செயலகச்‌ சங்கம்‌ கவலையுடன்‌ பின்வரும்‌ விஷயங்களை முதலமைச்சர்‌ கவனத்திற்குக்‌ கொண்டு வரக்‌ கடமைப்பட்டுள்ளது.

69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை இந்திய அரசியலமைப்பின்‌ மூலமாக பாதுகாத்து நடைமுறைப்படுத்தி வரும்‌ தமிழ்நாட்டில்‌, இந்திய அரசியலமைப்பின்‌ அங்கமான தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ அரசுப்‌ பணிக்குத்‌ தேர்வாகி, பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றிவரும்‌ பணியாளர்களின்‌ முக்கியத்துவத்தையும்‌ திறமையையும்‌ பின்னுக்குத்‌ தள்ளிவிட்டு, ஆலோசகர்கள்‌ மூலமாக அரசு நிர்வாகத்தினை நடத்துவது என்பது ஏற்புடையதல்ல.

களத்தில்‌ நின்று, மக்களோடு மக்களாக சமூகத்தின்‌ முன்னேற்றத்திற்காக பாடுபடும்‌ பணியாளர்களின்‌ உழைப்பினை புறந்தள்ளிவிட்டு, ஆலோசகர்களின்‌ அறிவுரையின்படி அரசின்‌ கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும்‌ போக்கு என்பது சமூக நீதிக்கு எதிரானதாகும்‌.

திராவிட மாடலுக்கு எதிரான நடவடிக்கை

ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ மூலமாக இணைச்‌ செயலாளர்‌, துணைச்‌ செயலாளர்‌, இயக்குநர்‌ நிலையில்‌ 45 பணியிடங்களை இடஒதுக்கீட்டினை மறுதளித்து, சமூக நீதிக்கு எதிராக நிரப்ப எத்தனித்தபோது, தமிழ்நாடு அரசு அதனை எதிர்த்து குரல்‌ கொடுத்து தடுத்து நிறுத்திவிட்டு, மாநில அரசில்‌ எந்தவித சலனமுமின்றி ஆலோசகர்கள்‌ நியமனங்களை பன்மடங்கு அதிகரித்திருப்பது என்பது திராவிட மாடலுக்கு எதிரான நடவடிக்கையாகும்‌.

நிபணத்துவம்‌ தேவைப்படும்‌ நேர்வுகளில்‌ ஆலோகர்களை நியமிப்பது என்ற நடைமுறை கைவிடப்பட்டு, ஒவ்வொரு துறைகளிலும்‌ கணக்கிலடங்கா நியமனங்கள்‌ சமீபகாலமாக நடைபெற்றுக்‌ கொண்டிருக்கிறது. இவ்வாறு நியமிக்கப்படும்‌ ஆலோசகர்கள்‌ சர்வதேச அளவில்‌, சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதற்கான பயிற்சி பெற்று, பல்வேறு முதலாளித்துவ நிறுவனங்கள்‌ மூலமாக பல்வேறு வழிகளில்‌ மாநில அரசில்‌ உட்புகல்போக்கு என்பது மிகவும்‌ அபாயகரமானதாகும்‌.

அரசு வேலை என்ற கனவு

தற்போது தமிழ்நாடு அரசில்‌ காலியிடங்களின்‌ எண்ணிக்கை ஏறத்தாழ 3.5 இலட்சத்திற்கும்‌ மேலுள்ள சூழ்நிலையில்‌, இதைப்போன்ற ஆலோசகர்களின்‌நியமனங்கள்‌, காலிப்‌ பணியிடங்களை நிரப்பாமல்‌ அரசு நிர்வாகத்தினை நடத்துவதற்கு மறைமுகமாக உதவிக்‌ கொண்டிருக்கிறது. இப்போக்கு நீடித்தால்‌, இளைய சமூகத்தின்‌ அரசு வேலை என்ற கனவினை சீரழித்துவிடும்‌.

இந்த நியமனங்கள்‌ அனைத்துமே அரசினால்‌ ஏற்பளிக்கப்பட்ட பணியிடங்களை ஆக்கிரமிக்கவில்லை என்பது மட்டுமே வரவேற்றகத்தக்க விஷயம்‌.

தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தினையே அப்புறப்படுத்திவிட்டு, அரசுப்‌ பணிக்குபணியாளர்களை தேர்வு செய்வதற்கான நிறுவனத்தினை ஒப்பந்தப்புள்ளி மூலமாக அமர்த்துவதற்கு வழிமுறைகளைக்‌ கண்டறிவதற்கான குழுவானது மனிதவள மேலாண்மைத்‌ துறையால்‌ அரசாணை எண்‌ 115-நாள்‌ 18.10.2022ல்‌ அமைக்கப்பட்டதை தமிழ்நாடு தலைமைச்‌ செயலகச்‌ சங்கம்‌ முதலமைச்சரின்‌ கவனத்திற்குக்‌ கொண்டு வந்தபோது அதனை அவர் தடுத்து நிறுத்தினார்‌.

தமிழ்நாடு அரசின்‌ பல்வேறு துறைகளில்‌ மேற்கொள்ளப்பட்டுவரும்‌ ஆலோசகர்கள்‌ நியமனங்களை முற்றிலுமாக கைவிட ஆணையிட வேண்டும்‌.

இவ்வாறு தமிழ்நாடு தலைமைச்‌ செயலகச்‌ சங்கம்‌ தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Embed widget