மேலும் அறிய

கன்னியாகுமரியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 5 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்பேரில் சிவகுரு குற்றாலம் ,ஐந்து லட்ச ரூபாயை இன்று டிஎஸ்பி தங்கவேலு விடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரைப் பிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம். இவர் டெக்ஸ்டைல் தொழில் அதிபராக உள்ளார். இவரிடம் 2 பேர் வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள இடத்தை விலை பேசி ரூ.1.5 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த 2 பேரும் வாங்கிய பணத்தை கொடுக்காமல், நிலத்தையும் பத்திரம் எழுதிக்கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது.
 
கன்னியாகுமரியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 5 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது
 
இதனால் சிவகுருகுற்றாலம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு (டி.எஸ்.பி.) தங்கவேலிடம் (55) புகார் கொடுத்தார். அந்த புகாரை அவர் விசாரித்து வந்தார். அப்போது இந்த புகாருக்கு தீர்வு கண்டால் தனக்கு ரூ.10 லட்சம் லஞ்சமாக தரவேண்டும் என்று சிவகுருகுற்றாலத்திடம் துணை சூப்பிரண்டு தங்கவேல் கூறியதாக தெரிகிறது.இதற்கிடையே இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, சிவகுருகுற்றாலத்திடம் பணம் வாங்கி மோசடி செய்த நபர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்தை எழுதிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த துணை சூப்பிரண்டு தங்கவேல், தான் இந்த புகாரை விசாரித்து பேசி முடித்ததால் தானே உங்களுக்கு சேரவேண்டிய நிலம் கிடைத்தது.
 
கன்னியாகுமரியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 5 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது
 
இதனால் எனக்கு ரூ.5 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என சிவகுரு குற்றாலத்திடம் கடந்த ஒரு வாரமாக கேட்டு தொல்லைப்படுத்தியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் சிவகுரு குற்றாலம் ,ஐந்து லட்ச ரூபாயை இன்று டிஎஸ்பி தங்கவேலு விடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரைப் பிடித்தனர். 
 
கன்னியாகுமரியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 5 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது
 
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் தங்கியிருந்த நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கைது செய்யப்பட்ட துணை சூப்பிரண்டு தங்கவேலுவை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தங்கவேலுவின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூர் ஆகும். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளி மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு மாற்றலாகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!

Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?

பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்

DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு

"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
Embed widget