மேலும் அறிய

Electricity Price Hike: ஜூலையில் எகிறப்போகும் மின் கட்டணம்? : கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்!

10 மாதங்களில் மீண்டும் ஓர் உயர்வா? மின்கட்டணத்தை ஜூலையில் உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 

10 மாதங்களில் மீண்டும் ஓர் உயர்வா? மின்கட்டணத்தை ஜூலையில் உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால், அடுத்த மாதம் முதல் மீண்டும்  மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 10 மாதங்களில் மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பை ஈடுகட்டுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அனுமதி வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதையேற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. சில பிரிவினருக்கு அதிகபட்சமாக 52% வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் 2026- 27ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டு ஜூலை மாதத்தில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதித்தது. அதைத்தான் தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது செயல்படுத்தத் துடிக்கிறது.

4.70% மின்சாரக் கட்டணம் உயர்வு?

நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தின் நுகர்வோர் விலைக்குறியீடு, அதாவது பணவீக்கத்தின் அளவு அல்லது 6%, ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப் பட வேண்டும். கடந்த ஏப்ரல் மாதத்தின் பணவீக்கம் 4.70% என்பதாலும், அது 6 விழுக்காட்டை விட குறைவு என்பதாலும் அடுத்த மாதம் முதல் 4.70% மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து விட்டது என்பதற்காகவே, அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தால், அது சரி செய்ய முடியாத பெருந்தவறாக அமைந்து விடும்.. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் 10 ஆண்டுகளுக்கு முன் உயர்த்தப்படவில்லை; 10 மாதங்களுக்கு முன்புதான் உயர்த்தப்பட்டது. மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து  பொதுமக்களால் இன்னும் மீண்டு வர முடியவில்லை. பல குடும்பங்களில், மின்கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவை சமாளிக்க பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தியாகம் செய்ய வேண்டியுள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும்  பாதிப்புகளை சொல்லி மாளாது. மின்சாரக் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அதேபோல், விசைத்தறி உரிமையாளர்களும் மின்கட்டண உயர்வின் தாக்கங்களை தாங்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேறி விட்டனர். சிறு வணிகர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பெரும்பகுதி மின்கட்டணம் செலுத்துவதற்கே செலவாகி விடுகிறது. இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டணம் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டால், வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள்.

மாநில அரசாலேயே முடியாதபோது மக்களால் எப்படி?

இவை அனைத்தையும் கடந்து பணவீக்கத்தின் அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது நடைமுறை சாத்தியமற்றது. ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசால் கூட, கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கத்திற்கு இணையாக  அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடந்த  மே மாதம்தான் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான அகவிலைப்படியை வழங்கியுள்ளது. மாநில அரசாலேயே பணவீக்கத்திற்கு இணையாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடியாத நிலையில், பொதுமக்களால் எப்படி பணவீக்கத்திற்கு இணையாக மின்கட்டணத்தை உயர்த்து செலுத்த முடியும்?

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் 90% மக்களின் வருமானம், ஆண்டுக்கு 2% கூட உயருவதில்லை. அப்படிப்பட்ட மக்களால் 4.70% மின்கட்டண உயர்வை சமாளிக்க முடியாது. தமிழ்நாட்டின் வரலாற்றில் 10 மாதங்களில் இரண்டாவது முறையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது இதுவரை நிகழ்ந்ததில்லை. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு, இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை, அவற்றால் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றால் தமிழக மக்கள் கடும்  நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், இன்னொரு சுமையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

எனவே, மின்சாரக் கட்டணத்தை ஜூலை மாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, 2026- 27ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணையை செயல்படுத்துவதில் இருந்தும் விலக்கு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget