மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு
தன்னை சந்திக்க யாரும் தற்போது சென்னை வரவேண்டாம். நான் அழைக்கும் வரை யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

தன்னை சந்திக்க யாரும் தற்போது சென்னை வரவேண்டாம். நான் அழைக்கும் வரை யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
இன்று திண்டிவனம் தைலாவரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பல விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைத்தார் ராமதாஸ்.
அப்போது பேசிய அவர், “அன்புமணி பேசியதை கேட்டேன். அவர் மக்களையும் கட்சியினரையும் நிர்வாகிகளையும் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டட்தில் 8 பேர் மட்டுமே கலந்துகொண்ட போதே நான் செத்துப்போய்விட்டேன். எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கூடாது என நிர்வாகிகளை தடுத்துவிட்டார்.
பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் நீங்கள்தான் எனக்கு கொள்ளி வைக்கணும் என அன்புமணி என்னை மிரட்டினார். அவரும் சௌமியாவும் என் காலை பிடித்து அழுதனர். என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
கூட்டணிக்கான எல்லா வேலையையும் சௌமியாவே செய்துவிட்டார். மறுநாள் காலை வாசலில் பாரத் மாதா கி ஜே என கோஷம் கேட்கிறது. இது அனைத்தும் எனக்கு தெரியாமலேயே நடந்தது.
தனது தாய் சரஸ்வதி மீதே பாட்டிலை எறிந்து தாக்க முயன்றவர் அன்புமணி. பாமக என்ற அழகான கட்சியை ஒரே நாளில் கண்ணாடி போல் நொறுக்கியவர் அன்புமணி.
தவறு செய்தது அன்புமணி அல்ல, நான் தான். எனது சத்தியத்தையும் மீறி 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது எனது தவறு தான். அன்புமணி தவறான ஆட்டத்தை தொடங்கி, அடித்து ஆடத் தொடங்கினார்.
பொதுக்குழு கூட்டத்தில் மேடை நாகரீகம் இன்றி அன்புமணி நடந்துகொண்டார். எடுத்தேன் கவிழ்த்தேன் என பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்டது யார்?
நான் பாடுபட்டு வளர்த்த கட்சி எனக்கே நிர்வாகிகளை சந்திக்க கட்டுப்பாடு போடுகிறார்” என சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் பாமக நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவை போட்டுள்ளார். அதில், தன்னை சந்திக்க யாரும் தற்போது சென்னை வரவேண்டாம். நான் அழைக்கும் வரை யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.





















