மேலும் அறிய

மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு: அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்

மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது - பாமக தலைவர் அன்புமணி

சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய வங்கக்கடலில் 81 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 5 எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்‌ஷன் நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களின் சூழலைக் கெடுப்பதற்கான எந்தத் திட்டமாக இருந்தாலும் அவை முறியடிக்கப்பட வேண்டியவை தான்.

மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய கடல் பகுதியில் 1997-ஆம் ஆண்டில் எண்ணெய்க் கிணறுகளும், எரிவாயுக் கிணறுகளும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் அமைக்கப்பட்டன. பின்னாளில் ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்‌ஷன் என்ற அமெரிக்க நிறுவனம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் இந்த எண்ணெய்க் கிணறுகளை பராமரித்து வந்தது. 2011-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட இந்த எண்ணெய்க் கிணறுகளில் கடந்த ஆண்டு மீண்டும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தொடங்கப்பட்டது. அந்த எண்ணெய்க் கிணறுகளை விரிவாக்கம் செய்யும் நோக்குடன் கூடுதலாக 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அமெரிக்க நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.

வங்கக் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்; ஏற்கனவே அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இப்போது கூடுதலாக எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்தப் பகுதியில் மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான் மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி சாதித்தது. அதனால் இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முயல்கின்றன. இதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவே கூடாது. அதுமட்டுமின்றி, அப்பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் எண்ணெய்க் கிணறுகளையும் மூட ஆணையிட வேண்டும்.

ஒரு வேளை இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் கூட, எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படவுள்ள பகுதி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் (Tamil Nadu Coastal Zone Management Authority) கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அதற்கு தமிழக அரசு மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி கட்டாயம் ஆகும். இந்த அனுமதியை தமிழக அரசு வழங்கக் கூடாது.

இதேபோல், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம் சில மாதங்களுக்கு முன் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி விண்ணப்பித்தது. அதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இதுவரை தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அதே அணுகுமுறையைத் தான் எதிர்காலத்தில் இந்தத் திட்டத்திற்கும் தமிழக அரசு கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

"பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை" - காட்டாட்சி என வேல்முருகன் கடும் தாக்கு!
முதல்வர் விஜய் குறித்து நாக்கூசாமல் பேசிய திமுக பெண்.. குதூகலித்து சிரிக்கும் மேயர் பிரியா.. கனிமொழி கப்சிப்
முதல்வர் விஜய் குறித்து நாக்கூசாமல் பேசிய திமுக பெண்.. குதூகலித்து சிரிக்கும் மேயர் பிரியா.. கனிமொழி கப்சிப்
தமிழகத்தில் 5 நாள் மழை அலர்ட்: 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! எங்கெல்லாம்?
தமிழகத்தில் 5 நாள் மழை அலர்ட்: 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! எங்கெல்லாம்?
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Embed widget