இடஒதுக்கீடு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய அன்புமணி ராமதாஸ்
தமிழக அமைச்சரையும் முதல்வரையும் பலமுறை சந்தித்து இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் செய்யவில்லை - அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம்: திண்டிவனத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய அன்புமணி ராமதாஸ், சமூக நீதி விரோதி துரோகி தான் திமுக மக்கள் நிச்சயமாக புறக்கணிப்பார்கள் என தெரிவித்தார்.
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடஒதுக்கீடு போராட்டதில் உயிர் நீத்த தியாகிகளின் உருவ படத்திற்கு மெழுகு வர்த்தி ஏந்தியும் மலர் தூவி கட்சி நிர்வாகிகளுடன் அஞ்சாலி செலுத்தினார். அதனை தொடர்ந்து உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தினருக்கு அன்புமணி ராமதாஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், இடஒதுக்கீடு போராட்டத்தில் 21 தியாகிகள் காவல் துறையினரால் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாகவும், ஆளும் திமுகவிற்கு எதைப்பற்றியும் கவலை இல்லை வன்னியர் சமூக மக்களின் வாக்கு மட்டும் அவர்களுக்கு வேண்டும் இடஒதுக்கீடு மட்டும் வழங்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
பாமக சார்பில் வருகின்ற 17.12.2025 ஆம் தேதி 15 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் அமைதியான நிலையில் நடைபெறும் என்றும் தமிழக அமைச்சரையும் முதல்வரையும் பலமுறை சந்தித்து இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் செய்யவில்லை குற்றஞ்சாட்டினார்.
சமூக நீதி பற்றி பேச திமுகவிற்கு தகுதிகிடையாது என்றும் பெரியார் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாள். ஆந்திரா, ஒரிசா போன்ற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டார்கள். ஆனால் தமிழகத்தில் நடத்தவில்லை சமூக நீதி விரோதி துரோகி தான் திமுக மக்கள் நிச்சயமாக தேர்தலில் புறக்கணிப்பார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு போராட்டம்
1987 இடஒதுக்கீடு போராட்டம் (1987 Reservation Protest, 1987 வன்னியர் போராட்டம்) என்பது தமிழ்நாட்டில், வன்னிய சமுதாய மக்களால் செப்டம்பர் மாதம், 1987 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு மாபெரும் போராட்டம் ஆகும். வன்னியர் சாதியினருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரி வன்னியர் சாதி சங்கத்தினரால் (பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி) நடத்தப்பட்ட போராட்டமாகும். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் மரு. இராமதாசின் தலைமையில் நடைபெற்றது. இந்த இட ஒதுக்கீடு போராட்டகாரர்களை அடக்குவதற்கு தமிழக காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்





















