மேலும் அறிய

பத்திரப் பதிவு, நில அளவையை தனியார்மயமாக்கும் முயற்சி: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

பத்திரப் பதிவு, நில அளவைப் பணிகளை தனியார்மயமாக்கும் முயற்சி ஆபத்தானது: அரசு உடனடியாக கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு மற்றும் நில அளவைப் பணிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இன்றியமையாதவையான பத்திரப் பதிவு, நில அளவை ஆகிய பணிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நில அளவையாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் வேலைக்கு அச்சுறுத்தலையும், பத்திரப்பதிவில் கூடுதல் செலவு மற்றும் ஊழலுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கச் செய்யும் அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

 

சென்னையில் அம்பத்தூர், திருவான்மியூர், தியாகராயர்நகர் மற்றும் செங்கல்பட்டு, கோவை என 5 இடங்களில் முன்மாதிரி பத்திரப் பதிவு மையங்களை தனியார் மூலம் அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசு கோரியிருக்கிறது. இந்த மையங்கள் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் மால்களில் அமைக்கப்படும்; அவற்றில் அனைத்து வகையான சொகுசு வசதிகளும் இடம் பெற்றிருக்கும்; பத்திரப் பதிவு செய்ய விரும்புவோர் வரிசையில் நிற்காமல் உடனடியாக பத்திரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இவற்றுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, மேலும் 20 இடங்களில் இம்மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் பத்திரப் பதிவு செய்ய வழக்கமான கட்டணங்களுடன் ரூ.2090 முதல் ரூ.10,630 வரை சேவைக் கட்டணமாக இந்த மையங்களை நடத்தும் தனியார் நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் இப்போது 56 பதிவு மாவட்டங்களில் மொத்தம் 595 பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகையச் சூழலில் தனியார் பதிவு மையங்கள் உருவாக்கப்படுவது தேவையற்றது. அரசு பதிவு அலுவலகங்களில் வழங்கப்படுவதை விட மேம்பட்ட வசதிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த மையங்கள் அமைக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பத்திரப் பதிவுக்காக வருவோருக்கு மேம்பட்ட வசதிகளை வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால், அதை பத்திரப் பதிவுத் துறையின் கீழ் இயங்கும் பத்திரப் பதிவு அலுவலங்களில் செய்து கொடுக்க முடியும். இதற்கு நிதி ஒரு தடையாக இருக்காது.

 

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் பதிவுத் துறை மிகவும் முக்கியமானது. பத்திரப் பதிவு மூலமாக மட்டுமே நடப்பாண்டில் இந்தத் துறைக்கு ரூ.35,109 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 1% நிதியை செலவிட்டாலே அனைத்து பதிவு அலுவலகங்களிலும் குளிரூட்டி உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளை செய்து தர முடியும். அந்தப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது மட்டுமின்றி, அதற்காக ரூ.10,630 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது பொதுமக்களை சுரண்டும் செயலாகும்.

 

தனியார் நிறுவனங்களால் அமைக்கப்படும் முன்மாதிரி பதிவு மையங்களில் பத்திரப் படிவுக்காக வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளையும், சேவைகளையும் மட்டும் தான் தனியார் நிறுவனங்கள் செய்யும் என்றும், பத்திரப் பதிவு மற்றும் அது சார்ந்த சட்டப்பூர்வ பணிகளை அரசு பதிவாளர்கள் தான் செய்வார்கள் என்பதால் இதை தனியார்மயமாக்கலாக கருத முடியாது என்றும் அதிகாரிகள் சார்பில் விளக்கமளிக்கப்படுகிறது.

 

இந்தியாவில் தனியார்மயமாக்கலின் வரலாற்றை அறிந்தவர்களால் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தனியார்மயமாக்கல் என்பது ஒட்டகத்தைப் போன்றது. அந்த ஒட்டகம் கூடாரத்திற்குள் மொத்தமாக நுழைந்து விடாது. முதலில் தலையை மட்டும் தான் நுழைக்கும். அதன்பின் படிப்படியாக உள்ளே நுழைந்து ஒட்டுமொத்தக் கூடாரத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். பதிவுத்துறையில் 5 முன்மாதிரி பதிவு மையங்களை அமைப்பதற்கு தனியாரை அனுமதிப்பதும் ஒட்டகத்தின் தலையை கூடாரத்திற்குள் நுழைக்க அனுமதிப்பதற்கு ஒப்பானது. வெகுவிரைவில் ஒட்டுமொத்த பதிவுத்துறையும் தனியார்மயமாக்கப்படுவதற்கே இது வழிவகுக்கும்.

 

அதேபோல், நில அளவைத் துறையில் மாதம் ரூ.23 ஆயிரம் என்ற ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் நில அளவையாளர்கள் (சர்வேயர்கள்) தங்களுக்கு பணி நிலைப்பும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இது தொடர்பாக துறையின் உயரதிகாரிகளை அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த போது, ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நில அளவைப் பணிகளும் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் வழங்கப்படவுள்ளதாகவும், தற்காலிக நில அளவையாளர்கள் அனைவரும் திசம்பர் மாதத்துடன் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் குறைந்த ஊதியத்திலான பணியும் கைவிட்டுப் போய்விடுமோ? என அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 

நில அளவைப் பணிகளாக இருந்தாலும், பத்திரப் பதிவாக இருந்தாலும் அதில் ஊழல் தலைவிரித்தாடுவது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த இரு பணிகளும் தனியார்மயமாக்கப்பட்டால் ஊழல் மேலும் மேலும் அதிகரிப்பது மட்டுமின்றி, சரி செய்ய முடியாத அளவுக்கு முறைகேடுகளும் அதிகரிக்கும். எனவே, பத்திரப் பதிவு, நில அளவை ஆகியவற்றை தனியார்மயமாக்குவதற்கான முயற்சிகளை தமிழக அரசு கைவிட வேண்டும். அதற்கு பதிலாக இரு துறைகளிலும் போதிய எண்ணிக்கையிலான பணியாளர்களை நியமித்து, அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி மக்களுக்கு மேம்பட்ட சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை நீதிமன்றத்தில் கஞ்சா குற்றவாளி தப்பியோட்டம்: தண்டனை அறிவித்ததும் காவல்துறை தேடுதல்!
மதுரை நீதிமன்றத்தில் கஞ்சா குற்றவாளி தப்பியோட்டம்: தண்டனை அறிவித்ததும் காவல்துறை தேடுதல்!
ராமநாதபுரத்தில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்... வெளியானது புதிய லிஸ்ட்! செக் செய்வது எப்படி?
ராமநாதபுரத்தில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்... வெளியானது புதிய லிஸ்ட்! செக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
Embed widget