Ajith Daksha Team: நடிகர் அஜித் பணியாற்றிய தக்ஷா குழுவிற்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை...!
நடிகர் அஜித்குமார் பணியாற்றிய தக்ஷா குழுவிற்கு மத்திய அரசின் ட்ரோன்கள் தயாரிப்பிற்கான ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
![Ajith Daksha Team: நடிகர் அஜித் பணியாற்றிய தக்ஷா குழுவிற்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை...! Ajith Daksha team selected to manufacture drones indian government contract Make in India Project Ajith Daksha Team: நடிகர் அஜித் பணியாற்றிய தக்ஷா குழுவிற்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/21/4b992b23ee12b455150c436e536173d9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிகராக மட்டுமின்றி திரைத்துறையை கடந்து பைக் ரேசர், கார் ரேசர், மெக்கானிக், ஆளில்லா குட்டி விமானங்களை உருவாக்குதல், துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட பன்முகத் திறன் கொண்டவர்.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் ஆளில்லா விமான வடிவமைப்பு பிரிவு குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின்ஆலோசகராக அஜித்குமார் செயல்பட்டு வருகிறார். இந்த குழு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆலோசனையின் பெயரில் தொடங்கப்பட்டது. அஜித்குமாரின் ஆலோசனை மற்றும் குழுவின் பிற உறுப்பினர்களின் உதவியுடன் இந்த குழு மக்களுக்கு பயனளிக்கும் பல ட்ரோன்களை வடிவமைத்து வருகிறது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைகழகத்தின் தக்ஷாகுழு ட்ரோன்கள் தயாரிப்பிற்காக மத்திய அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்திற்கு தேர்வாகி உள்ளது. வேளாண்துறை, தொழில்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ட்ரோன்களை ஊக்குவிக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த அடிப்படையில், ட்ரோன்களாக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்கள், அதை தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகையை பெற நாட்டில் ட்ரோன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், அஜித்குமார் ஆலோசகராக செயல்படும் தக்ஷா குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த குழு மட்டுமின்றி சென்னையைச் சேர்ந்த ஜூப்பா ஜியோ நேவிகேஷன் டெக்னாலஜிஸ் என்ற ட்ரோன்கள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகளவிலான ட்ரோன்கள் போட்டியில் பங்கேற்று சர்வதேச அளவில் 2ம் இடம் பிடித்து அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)