மேலும் அறிய
Advertisement
டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்
டெல்டா மாவட்டங்களில் இதுவரை 70 சதவிகிதம் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் இந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்ததை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி பணியினையும், தூர்வாரும் பணியினையும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட கொல்லுமாங்குடி பகுதியில் 18 ஏக்கர் இயந்திர நடவு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் மற்றும் இயந்திர நடவு பணியினை வேளாண்மைத்துறை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செருவலூர் கிராமத்தில் 80 ஏக்கரில் நேரடி விதைப்பு செய்துள்ள குருவை நெல் பயிரை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் விதை பதனிடும் நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இறுதியாக ஓடோம்போக்கியாற்றில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டம் பணியின் கீழ் 174 பணிகள் 16 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில், 1284 கிலோமீட்டர் பரப்பளவில் பணிகள் எடுக்கப்பட்டு 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு பகுதியில் 97 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டு குறுவை சாகுபடிக்கு தேவையான குறுகிய கால நெல் விதைகள், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள், மற்றும் நுண்ணூட்ட உரங்கள், போன்ற இடுபொருட்கள் போதிய அளவு இருப்பில் வைத்திடவும், நெல் நடவு இயந்திரங்கள் கொண்டு விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதற்கும் வேளாண்மை துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு 1398 மெட்ரிக் டன் நெல் விதைகள் தேவைப்படுகின்றது. இதுவரை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலமாக 919 மெட்ரிக் டன் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் 196 மெ. டன் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் 706 மெ. டன் விதைகள் தனியார் விற்பனை நிலையங்களிலும் கையிருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் இதுவரை 70 சதவிகிதம் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் இந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது தற்பொழுது மேட்டூர் அணை சரியான நேரத்தில் திறந்து விட்டதன் காரணமாக தற்போது வரை 1.70 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் விதைகள் அனைத்தும் கையிருப்பில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, உள்ளிட்ட வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை, அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion