மேலும் அறிய
Advertisement
ரேஷன் கடைகளில் போதிய அளவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது - உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி
''திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்படைய கூடிய பகுதிகளாக 212 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன''
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துதுறை வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார். டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயக்குமார், நாகை எம்.பி. செல்வராஜ், எம்.எல்.ஏக்கள் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளாக திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்படைய கூடிய பகுதிகளாக 212 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக 249 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மின் பகிர்மான கழகத்தின் மூலம் 1500 மின் கம்பங்கள், 40 மின்மாற்றிகள், 165 கி.மீ. மின் கம்பிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளில் இந்த மாதத்திற்கான தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு தட்டுபாடுன்றி வழங்கப்பட்டு வருகிறது. கொள்முதலில் நெல்லின் ஈரப்பத அளவினை 17 சதவீதத்தில் 20 சதவீதமாக உயர்த்தி வழங்கிட மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். நிச்சயம் ஈரப்பதம் உயர்த்தி வழங்குவாறுவார்கள் என எதிர்பார்க்கிறோம். நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார். அதனை தொடர்ந்து பல்வேறு துறைகள் மூலம் 329 பயனாளிகளுக்கு 7 கோடி 76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி உள்ளிட்ட அனைத்துதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தற்பொழுது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவிலுக்குட்பட்ட கமலாலய குளத்தின் கரைப்பகுதிகள் பாதிப்படைந்துள்ளதை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழையின் காரணமாக பழமையான திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவிலுக்குட்பட்ட கமலாலய குளத்தின் தென்கரை சுற்றுசுவர் பாதிப்படைந்துள்ளது. இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேதமடைந்த தெப்பகுளத்தின் சுற்று சுவரினை ஆய்வுசெய்து உடனடியாக சீரமைக்கவும், நீராட வருகின்ற பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் உத்தரவிட்டு இருந்தார்கள். அந்த வகையில், தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மேலும் பாதிப்படையாத வகையிலும் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகள் கொண்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படா வண்ணம் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விரைவில் கமலாலய குளத்தின் கரைப்பகுதிகளின் ஸ்திரத்தன்மையை முழுமையாக ஆய்வு செய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று காலை திருவாரூர் கமலாலய குளத்தில் தென்கரை பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர். சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டார். மேலும் அந்த பகுதியில் காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion