மேலும் அறிய

ஆவின் வாடகை 400% உயர்வு: ஏழை வணிகர்கள் வாழ்வுரிமை கேள்விக்குறி - அன்புமணி.

ஆவின் பாலகங்களின் மாத வாடகையை 140%   உயர்த்துவதா? ஏழை சிறுவணிகர்களை பாதிக்கும் வாடகை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகங்களின் மாத வாடகை 140 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழைச் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த வாடகை உயர்வை ஆவின் நிறுவனம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் நிறுவனம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில் செயல்பட்டு வரும் 213 ஆவின் பாலகங்களின் மாத வாடகை 140% உயர்த்தப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இல்லாமல், சிறிய முதலீட்டில் பாலகம் நடத்தி வரும் ஏழை சிறு வணிகர்களை பாதிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

 

ஆவின் பாலகங்களின் மாத வாடகை ஜிஎஸ்டி வரிகளையும் சேர்த்து ரூ.4130 ஆக இருந்த நிலையில், இப்போது ரூ.5782 உயர்த்தப்பட்டு ரூ. 9,912 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நடப்பாண்டில் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது வாடகை உயர்வு ஆகும்.

 

முந்தைய திமுக ஆட்சியில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, ஆவின் பாலகங்களின் வாடகை 230% வரை உயர்த்தப்பட்டது. அதற்கு முன் பாலகங்களின் மாத வாடகை ரூ.2000 முதல் ரூ.2500 வரை ஆக இருந்த நிலையில், ரூ.4130, ரூ.5,900, ரூ.8,260 ஆக உயர்த்தப்பட்டது. அந்த வாகை உயர்வையே தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், இப்போது மீண்டும் ஒரு முறை வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.

 

கடந்த மார்ச் மாதத்தில் ரூ.2000 ஆக இருந்த ஆவின் பார்லர் வாடகை இரு கட்டங்களில் ரூ.9912 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது சுமார் 400% உயர்வு ஆகும். ஆவின் பாலகங்களில் ஆயிரக்கணக்கில் வருமானம் கிடைக்காது. மக்கள் சேவையே ஆவின் நிறுவனத்தின் நோக்கம் என்பதால் மிகக் குறைந்த தொகை தான் ஆவின் பாலகங்களை நடத்துவோருக்கு கமிஷனாக வழங்கப்படும். ஆவின் பால் தவிர மற்ற பொருள்கள் அதிக அளவில் விற்பனையாகாது என்பதால் பாலகம் நடத்துவோருக்கு மிகக் குறைந்த வருமானமே கிடைக்கும். அதையும் வாடகை உயர்வு என்ற பெயரில் ஆவின் நிறுவனமே பறித்துக் கொள்வது நியாயமல்ல.

சில பத்தாயிரங்கள் கூட முதலீடு செய்ய வசதி இல்லாதவர்கள் தான் ஆவின் பாலகங்களை நடத்துகின்றனர். பெரும்பாலும் பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரமாக ஆவின் பாலகங்கள் திகழ்கின்றன. இந்த நடவடிக்கையால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், ஆவின் பார்லர்களின் வாடகை உயர்வை ஆவின் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Kallakurichi MLA:கள்ளக்குறிச்சி தவெக MLA மீது மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
கள்ளக்குறிச்சி தவெக MLA மீது மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
Kallakurichi MLA: மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மதுரை புத்தகத் திருவிழா: ரூ.1.51 கோடி விற்பனை, மக்கள் வெள்ளத்தில் அரங்கம் !
மதுரை புத்தகத் திருவிழா: ரூ.1.51 கோடி விற்பனை, மக்கள் வெள்ளத்தில் அரங்கம் !
Udhayanidhi:
Udhayanidhi: "பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கத்தான் ஆட்சியா?" முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கேள்வி
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi MLA: மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
Udhayanidhi:
Udhayanidhi: "பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கத்தான் ஆட்சியா?" முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கேள்வி
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
Kallakurichi MLA: தவெக MLA மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
தவெக MLA மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
புயல், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ரூ.1.46 கோடியில் பாதுகாப்பு மையங்கள் சீரமைப்பு!
புயல், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ரூ.1.46 கோடியில் பாதுகாப்பு மையங்கள் சீரமைப்பு!
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Embed widget