மேலும் அறிய

ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தமா? நிறுவனம் கொடுத்த பரபரப்பு விளக்கம்!

Aavin: ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு மாறானவை. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.

ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பனீர், வெண்ணெய், நெய், குக்கீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆவின் நிறுவனம் விளக்கம்

ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எந்தவொரு பொருளின் உற்பத்தியும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. நெய், வெண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களும் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு, விற்பனை நிலையங்களுக்கும் சில்லறை விற்பனை முகவர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆவின் நிறுவனம் 175-க்கும் மேற்பட்ட வகையான பால் மற்றும் பால் பொருட்களைத் தயாரித்து, நுகர்வோரின் தேவைக்கேற்ப சந்தைப்படுத்தி வருகிறது. சென்னையில் உள்ள சுமார் 36 ஆவின் பாலகங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!

மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆவின் நிறுவனம் சார்பில் புதிதாக சாக்லேட் (Rs1) மற்றும் பால் ரஸ்க்  விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இப்புதிய பொருட்களுக்கும் பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதுடன், நுகர்வோரின் ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட முக்கியப் பால் பொருட்களின் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது ஆவின் பால் பொருட்களுக்கு நுகர்வோரிடையே தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பைப் பிரதிபலிக்கிறது.

தீபாவளிப் பண்டிகை

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், விற்பனை முகவர்களிடமிருந்து பெறப்படும் தேவைக் கணிப்புப் பட்டியல்களின் அடிப்படையில், அவர்களுக்குத் தேவையான பால் பொருட்களைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தடையின்றி விநியோகம்

எனவே, ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு மாறானவை. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆவின் நிறுவனம், தரமான பால் மற்றும் பால் பொருட்களைத் தொடர்ந்து தயாரித்து, நுகர்வோரின் தேவைக்கேற்ப தடையின்றி விநியோகம் செய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Soorasamharam: விண்ணைப் பிளக்கும் அரோகரா கோஷம்! இன்று சூரசம்ஹாரம்! திருச்செந்தூரில் கடல்போல் குவிந்த பக்தர்கள்!
Soorasamharam: விண்ணைப் பிளக்கும் அரோகரா கோஷம்! இன்று சூரசம்ஹாரம்! திருச்செந்தூரில் கடல்போல் குவிந்த பக்தர்கள்!
தமிழகத்தில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா?
தமிழகத்தில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா?
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
Tasmac Case: ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
TN Weather News: வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
Tasmac Case: ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
Mohit Ulva :
Mohit Ulva :"கல்வெட்டால பொறிக்குற மாதிரி ஒரு பேட்டிங்.." பாகிஸ்தானை தனி ஆளாக பந்தாடிய மோகித்!
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்..முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்.. முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
Embed widget