மேலும் அறிய

உயராத கொள்முதல் விலை; ஆவின் பால் தட்டுப்பாடு- உடனே அதிகரிக்க அன்புமணி கோரிக்கை

ஆவின் பால் தட்டுப்பாடு: கொள்முதல் விலை உயர்வு அவசியம் - அன்புமணி வலியுறுத்தல்!

ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சியால் வினியோகம் பாதிப்பு: வாங்கும் விலையை உயர்த்தி கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் பெருமளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதால் சந்தையில் ஆவின் பாலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் வினியோகம் 3 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதாகவும்,  சென்னையில் மட்டும் 2.5 லட்சம் லிட்டர் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தேவையான  பால் வினியோகத்தில் ஆவின் நிறுவனம் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தினமும் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது 13.50 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. ஆவின்  நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும்  28 லட்சம் லிட்டர் என்ற அளவுக்கு முறைந்து விட்டது தான் ஆவின் பால் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் ஆகும்.



கோடைக்காலம் என்பதால் தான் ஆவின் பால் கொள்முதல் குறைந்திருப்பதாக ஆவின் நிறுவனம் கூறுகிறது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாகவே ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டில்  ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும் 41 லட்சம் லிட்டராக இருந்தது.  2022-ஆம் ஆண்டில்  38 லட்சம் லிட்டர்,  2023-ஆம் ஆண்டில் 30 லட்சம் லிட்டர் என குறைந்த  ஆவின் பால் கொள்முதல் இப்போது 28 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது.

ஆவின் பால் வினியோகம் குறைந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அரசுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால்  விலைக்கும், தனியார் நிறுவன பால் விலைக்கும் இடையே லிட்டருக்கு  ரூ.16 முதல் ரூ.24 வரை அதிகம் ஆகும்.  தனியார் நிறுவன  பாலை அதிக விலை கொடுத்து வாங்க முடியாத மக்களுக்கு வரப்பிரசாதமாக ஆவின் பால் அமைந்துள்ளது.  பால் வினியோகத்தைக் குறைந்து அந்த மக்களை ஆவின் தண்டிக்கக்கூடாது.

ஆவின் பால்கொள்முதல் 13 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதற்கு காரணம் அதன் கொள்முதல் விலைகள் உயர்த்தப்படாதது தான்.   பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 , எருமைப்பாலுக்கு  லிட்டர் ஒன்றுக்கு ரூ.44  என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள்  அதை விட லிட்டருக்கு 12 வரை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றன.  அதற்கு இணையாக ஆவின்  நிறுவனமும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதன் கொள்முதலை  அதிகரிக்க முடியாது.

ஆவின் நிறுவனத்தின்  பால் கொள்முதலை  அதிகரிப்பதற்காக அதன்  கொள்முதல் விலையை பசும்பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.45. எருமை பாலுக்கு ரூ.54 என  உயர்த்துவதற்கும்,  அதன் மூலம் அதிக  அளவிலான பாலை கொள்முதல் செய்து நியாயமான  முறையில் மக்களுக்கு வழங்கவும்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
தஞ்சாவூரை பசுமையால் அலங்கரித்த ஆர்ஆர் இன்ஃப்ரா! 8,500 மரக்கன்றுகள் நட்டு சாதனை
தஞ்சாவூரை பசுமையால் அலங்கரித்த ஆர்ஆர் இன்ஃப்ரா! 8,500 மரக்கன்றுகள் நட்டு சாதனை
பிக் பாஸ் திவாகர் கைது.. மதுரை வீட்டில் சென்னை போலீஸ் அதிரடி - யூடியூப் விவகாரத்தில் சிக்கல்!
பிக் பாஸ் திவாகர் கைது.. மதுரை வீட்டில் சென்னை போலீஸ் அதிரடி - யூடியூப் விவகாரத்தில் சிக்கல்!
ரூ.1 கோடி வேண்டுமா? என்ன செய்யணும்?: தஞ்சாவூர் கலெக்டர் அறிவித்தது என்ன?
ரூ.1 கோடி வேண்டுமா? என்ன செய்யணும்?: தஞ்சாவூர் கலெக்டர் அறிவித்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Tata Sierra EV QWD Review: டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
Embed widget