மேலும் அறிய

Aavin Price Hike: மீண்டும் விலை உயர்வா? பால், நெய்யை தொடர்ந்து ஆவினில் வெண்ணெய்க்கும் இந்த விலை..

ஆவின் நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆவின் நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுமக்களுக்கு மலிவு விலையில் பால் பொருட்கள் வழங்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆவின் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு பால் பொருட்கள், ஐஸ்கிரீம், இனிப்பு வகைகள் என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தரம் மற்றும் மலிவு விலை ஆகிய காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள் ஆவின் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதனிடையே தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது ஆவினில் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டு வந்தது. 

சமீபத்தில் ஆவினில் விற்பனை செய்யப்பட்டு வந்த பால் பாக்கெட்டுகளில் ஆரஞ்சு நிறப் பாக்கெட்டுகள் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

வெண்ணெய் விலை உயர்வு 

இந்நிலையில் ஆவினில் விற்பனை செய்யப்பட்டு வரும் வெண்ணெய் விலையை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமையல் பயன்பாட்டிற்கான உப்பு கலக்காத வெண்ணெய் (100 கிராம்) 52 ரூபாயில் இருந்து 55 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 500 கிராம் வெண்ணெய்  ரூ.250ல் இருந்து ரூ.260 ஆகவும், உப்பு கலந்த வெண்ணெய் (100 கிராம்) 52 ரூபாயில் இருந்து 55 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் 500 கிராம் 255 ரூபாயில் இருந்து, ரூ.265 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அதிர்ச்சி 

ஏற்கனவே நேற்றைய தினம் ஆவின் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் நெய் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி ஒரு லிட்டர் நெய் விலை ரூ.580-லிருந்து ரூ.630 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 5 லிட்டர் நெய்யின் விலை  2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாகவும், 500 மில்லி லிட்டர் நெய்யின் விலை 290 ரூபாயில் இருந்து 315 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி லிட்டரின் விலை ரூ.130-லிருந்து 145 ரூபாயாகவும், 100 மில்லி லிட்டர் நெய் விலை ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

 நெய் மீதான விலையேற்றம் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்தது. ஆவின் பொருட்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வந்த நிலையில் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget