மேலும் அறிய

Annamalai On Punjab Attack: பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதலா? அண்ணாமலை இரங்கல் செய்தியால் குழப்பம்..

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டு, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டு, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் மறுப்பையும் மீறி, அந்த தாக்குதலை இவர் பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு:

நாட்டின் மிக பெரிய ராணுவ முகாமான பதிண்டா ராணுவ முகாம், சண்டிகர்-ஃபாசில்கா பாதையில் தேசிய நெடுஞ்சாலை 7-இல் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த முகாமில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு  நடத்தப்பட்டது. இதையடுத்து, ராணுவ முகாம் அதிரடிப்படையினரால் முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டு,  தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, ராணுவ முகாமில் 4 வீரர்கள் இறந்து துப்பாக்குஇ குண்டுகள் துளைத்து உயிரிழந்து கிடந்தனர். அவர்கள் அனைவரும் பீரங்கிப் படையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 தமிழக வீரர்கள் வீரமரணம்:

இந்நிலையில், உயிரிழந்த வீரர்கள் யார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உயிரிழந்த 4 பேரில் இருவர் தமிழகத்தை சேர்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் பனங்காடு பகுதியை சேர்ந்த கமலேஷ் எனவும், மற்றொருவர்  தேனி மாவட்டம்  மூணாண்டிபட்டி பகுதியை சேர்ந்த லோகேஷ்குமார் என்பதும் தெரிய வந்துள்ளது.

”பயங்கரவாத தாக்குதல் கிடையாது”

”பதண்டா ராணுவ முகாமில் தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. ராணுவ முகாமில் இருந்த வீரர், சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 4 வீரர்கள் உயிரிழந்தனர். 2 நாட்களுக்கு முன்பு ராணுவ முகாமில் ஒரு இன்சாஸ் துப்பாக்கி, 28 குண்டுகள் மாயமாகின. அதற்கும், இச்சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இதன் பின்னணியில் ராணுவ வீரர்கள் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது” என பஞ்சாப் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை இரங்கல்:

இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பஞ்சாப் மாநிலம் பதிண்டா இராணுவ முகாமில் நேற்று நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்களான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு கமலேஷ் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு யோகேஷ் குமார் ஆகியோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மற்றும் அவர்களோடு வீரமரணம் அடைந்த இரண்டு ராணுவ வீரர்கள் ஆகியோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வீர வணக்கம்!” என குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை ட்வீட்:

பதிண்டா ராணுவ முகாமில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் கிடையாது என, பஞ்சாப் காவல்துறை ஏற்கனவே விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், அந்த சம்பவத்தை ம்த்தியில் ஆளும் பாஜகவை சேர்ந்த ஒரு மாநிலத்தின் தலைவரான அண்ணாமலையே பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Embed widget