100 Days of MK Stalin: கடந்த 100 நாட்களில் திமுக அரசின் அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி?
கடந்த சட்டபேரவைத் தேர்தலில் வாக்களித்த 4,516 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை சிவோட்டர் குழுமத்துடன் இணைந்து ஏபிபி நாடு செய்தி நிறுவனம் வெளியிட்டது.
மு. க ஸ்டாலின் அமைச்சரவையில், ஒட்டுமொத்த அமைச்சர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கடந்த சட்டபேரவைத் தேர்தலில் வாக்களித்த 4,516 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை சிவோட்டர் குழுமத்துடன் இணைந்து ஏபிபி நாடு செய்தி நிறுவனம் வெளியிட்டது.
கடந்த 100 நாட்களில் திமுக அரசின் அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி?
மிகச் சிறப்பு | சிறப்பு | சரசாரி | மோசம் | பதில் இல்லை | மொத்த எண்ணிக்கை | |
அதிமுக + பாஜக கூட்டணி | 59.9% | 12.7% | 13.0% | 8.0% | 6.5% | 100.0% |
திமுக + காங்கிரஸ் கூட்டணி | 45.3% | 32.3% | 12.1% | 6.1% | 4.1% | 100.0% |
அமமுக | 18.9% | 10.8% | 60.8% | 2.7% | 6.8% | 100.0% |
மக்கள் நீதி மய்யம் | 16.9% | 14.1% | 8.5% | 49.3% | 11.3% | 100.0% |
நாம் தமிழர் | 15.1% | 20.9% | 15.0% | 18.6% | 30.2% | 100.0% |
இதர கட்சிகள் | 22.1% | 20.8% | 23.4% | 18.2% | 15.6% | 100.0% |
மொத்தம் | 46.8% | 22.3% | 14.3% | 9.1% | 7.4% | 100.0% |
'ஏபிபி நாடு' செய்தி தளம் நடத்திய ஆய்வின் படி, 46.8 சதவீத வாக்காளர்கள் திமுக அமைச்சர்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். 22.3% வாக்காளர்கள் அமைச்சரவையின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். சரசியரியாக 9.1% பேர் மட்டுமே மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த 9.1% பேரில், 49.3 % பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
திமுக அமைச்சரவை: கடந்த மே 7ம் தேதி முதலமைச்சர் மற்றும் 33 அமைச்சர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த அமைச்சரவையில், 15 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். 19 அனுபவம் வாய்ந்த அமைச்சர்களில், 13 பேர் உள்ளாட்சி அமைப்புகளில் ஏதேனும் ஒரு பதவியில் இருந்தவர்கள். உதாரணமாக, ஆவடி நகர்மன்ற தலைவராக இருந்த சா.மு.நாசர் (பால்வளத் துறை அமைச்சர்) , சென்னை மேயராக இருந்த மா. சுப்ரமணியன், செஞ்சி நகர்மன்றத் தலைவராக இருந்த கே.எஸ் மஸ்தான், சிவகங்கை மாவட்டத்தின் பஞ்ச்யாத்துத் தலைவராக இருந்த பெரியகருப்பன் உள்ளிட்டவர்களுக்கு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டது.
2021 சட்டமன்றத் தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள்(180) பேர் அதிகம் படித்தவர்கள் (பட்டதாரிகள்). குறிப்பாக, திமுகவில் முதுகலை பட்டம் பெற்ற பலர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சேலம் கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அமைச்சர்கள் பிரதிநிதுத்துவம் செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்ற டி.ஆர்.பி ராஜா தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அதன்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின், பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள், சிறப்புத்திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன் உள்ளிட்ட துறைகளுக்கு பொறுப்பு வகித்து வருகிறார்.
நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக கே என் நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சராக ஐ பெரியசாமி, உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி, பொதுப் பணித்துறை அமைச்சராக எ வ வேலு,
வேளாண் துறை அமைச்சராக எம் ஆர் கே பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக மா சுப்ரமணியன், நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன், மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி , உள்ளிட்ட 34 பேர் அமைச்சரவையில் பொறுப்பு வகித்து வருகின்றனர்.
மேலும், இந்த அமைச்சரவையில் வெறும் 2 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். பி. கீதாஜீவன் சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சராகவும், என். கயல்விழிசெல்வராஜ் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். அதிகாரத்தில் பெண்களுக்கு சம பங்கு என்பது தமிழக அரசியலில் எட்டாக் கனியாகவே உள்ளது.