மேலும் அறிய

உதயநிதி கைது நடவடிக்கையை வீடியோ எடுத்த சஞ்சீவிடம் திமுகவினர் வாக்குவாதம்... பரபரப்பு வீடியோ வைரல்

உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய காவல்துறையினர் சென்றபோது, வீடியோ பதிவு செய்த சஞ்சீவிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய காவல்துறையினர் அவரது சென்னை இல்லத்திற்கு சென்றபோது அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அந்த நேரத்தில், முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் தனது வீட்டிலிருந்து அந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

உதயநிதி கைதை வீடியோ எடுத்த சஞ்சீவ்

அப்போது அங்கு கூடியிருந்த சில திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சஞ்சீவ் வீடியோ பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், சஞ்சீவ் தனது வீட்டிலிருந்து காவல்துறையினரின் நடவடிக்கையை பதிவு செய்து கொண்டிருந்ததாகவும், அதை பார்த்த திமுகவினர் அவரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது. வாக்குவாதத்தின் போது அங்கு இருந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உதயநிதி கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவரது இல்லம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் அரசியல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், சஞ்சீவைச் சுற்றிய இந்த சம்பவமும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைது பின்னணி

தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை திரிஷாவை குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவருக்கு எதிராக பல்வேறு இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டதுடன், அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலகினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் விசாரணைக்காக காவல்துறையினர் இன்று சென்னை இல்லத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்பட்டு கொண்டிருக்கிறார். இந்த கைதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியலில்  ஈடுபட்டுள்ளார்கள். பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக ஆதரவாளர்களை தமிழ்நாடு அதிரடி படை போலீஸ் கைது செய்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

1,000 அரசு பணியிடங்கள்... விரைவில் எழுத்துத் தேர்வு! புதுவை இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!
1,000 அரசு பணியிடங்கள்... விரைவில் எழுத்துத் தேர்வு! புதுவை இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!
பரந்தூர் விமான நிலையம் ரத்து; போட்டி மாநிலங்களுக்கு ஜாக்பாட், தமிழக வளர்ச்சிக்கு பேரிடி- ஸ்டாலின் காட்டம்!
பரந்தூர் விமான நிலையம் ரத்து; போட்டி மாநிலங்களுக்கு ஜாக்பாட், தமிழக வளர்ச்சிக்கு பேரிடி- ஸ்டாலின் காட்டம்!
விழுப்புரத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம்! 150+ நிறுவனங்கள்... 8-ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் வரை அனைவருக்கும் வாய்ப்பு!
விழுப்புரத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம்! 150+ நிறுவனங்கள்... 8-ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் வரை அனைவருக்கும் வாய்ப்பு!
ரூ.15 லட்சம் பட்ஜெட்; அதிக இடம் கொண்ட SUVகளில் எந்த கார்கள் பெஸ்ட்? இதோ லிஸ்ட்!
ரூ.15 லட்சம் பட்ஜெட்; அதிக இடம் கொண்ட SUVகளில் எந்த கார்கள் பெஸ்ட்? இதோ லிஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free LPG Cylinder: ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
CM Vijay: சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
TTV Dhinakaran: CM விஜய் ஆய்வு செய்து என்ன பலன்? நல்ல சோறு கிடைக்கல - டிடிவி தினகரன் ஆவேசம்
CM விஜய் ஆய்வு செய்து என்ன பலன்? நல்ல சோறு கிடைக்கல - டிடிவி தினகரன் ஆவேசம்
Cooperative Banks Gold Loan : தங்க நகைக்கடன் வாங்குவோருக்கு இனி குஷிதான்.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.? கூட்டுறவுத் துறை செம PLAN
தங்க நகைக்கடன் வாங்குவோருக்கு இனி குஷிதான்.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.? கூட்டுறவுத் துறை செம PLAN
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
Embed widget