மேலும் அறிய

Cyclone Mandous: மாண்டஸ் புயல் எதிரொலி: சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று முதல் லேசான மழை பெய்து வருகிறது. இன்று புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், வருகின்ற 11 ஆம் தேதி வரை கனமழை உள்ளதால் சேலம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார். முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்துறை, ஊரக வளர்ச்சித் துறை, சேலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, நீர்வள ஆதாரத்துறை, தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை, சுகாதாரத்துறை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை. மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

Cyclone Mandous: மாண்டஸ் புயல் எதிரொலி: சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

குறிப்பாக சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய அனுமதி பெறாமல் எந்தவித விடுப்பும் எடுக்க வேண்டாம் எனவும், மழையின்போது சாலை ஓரங்களில் மரங்கள் ஏதேனும் விழ நேர்ந்தால் உடனடியாக அதனை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள், ஜெ.சி.பி இயந்திரம் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். சேலம் மேட்டூர் அணை மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்து உடனுக்குடன் தலைமை இடத்திற்கு அறிக்கை அனுப்பிடவும், உபரி நீரை வெளியேற்ற நேர்ந்தால் பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்குதடையின்றி குடிநீர், பால், மருந்து இருப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடி எட்டி உள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிரிப்பு பகுதிகளில் தொடர் மழை உள்ளதால் மேட்டூர் அணையில் நீர்வரத்து, நீர் இருப்பு மற்றும் உபரி நீர் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

Cyclone Mandous: மாண்டஸ் புயல் எதிரொலி: சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

பொதுமக்கள் கனமழை உள்ளிட்ட அனைத்து அவசரகாலத் தேவைகளுக்கும் மாவட்ட ஆட்சியரகத்தில் பேரிடர் மேலாண்மைப் பிரிவில் 24 மணி நேரமும் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 க்கோ அல்லது 0427 2450498, 0427 2452202 மற்றும் 91541 55297 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் கடுமையான குளிர் இருப்பதால் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் தேவை என்று வெளியில் செல்ல வேண்டாம் என சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Embed widget