மேலும் அறிய

தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களை எச்சரித்த எமதர்மன்

இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து அவர்களை போக்குவரத்து விதிகளை மதிப்போம் என உறுதி ஏற்க வைத்து எச்சரித்து அனுப்பினார்.

தருமபுரியில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எமதர்மன் வேடமடைந்த கிராமிய நாடக கலைஞர்கள் தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாதவர்கள், போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்களை எச்சரித்து, நூதன முறையில் விழிப்புணர்வு, துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
 
தருமபுரி மாவட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  தருமபுரி நான்கு ரோட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை கவரும் வகையில் கிராமிய நாடக கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கிராமிய நாடகக் கலைஞர்கள் எமதர்மன், சித்திரகுப்தர், தூதுவர்கள் வேடம் அணிந்து வந்து சாலை விதிகளை மதிக்காமல் வருபவர்களை பிடித்து சாலை விதிகள் குறித்து அறிகுறித்தனர். இதில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள், மூன்று பேர் பயணம் செய்பவர்கள், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாதவர்கள் பிடித்து வந்து, சாட்டை வைத்து பயமுறுத்தி, பூலோகத்தில் இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும், தலைக்கவசம் அணியாவிட்டால் பத்தாயிரம் அபராதம் என்பது குறித்து தெரிவித்தும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும், செல்போன்களில் பேசியபடி பயணிக்க கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது, சிறு பிள்ளைகள் இடம் இரு சக்கர வாகனங்களை கொடுக்கக் கூடாது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை எடுத்துக் கூறி, எச்சரிக்கைகளை விடுத்தனர்.

தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களை எச்சரித்த எமதர்மன்
 
மேலும் இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து அவர்களை போக்குவரத்து விதிகளை மதிப்போம் என உறுதி ஏற்க வைத்து எச்சரித்து அனுப்பினார். அதேபோல் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களையும், சீட் பெல்ட் அணிந்து வருபவர்களையும், கிராமிய நாடக கலைஞர்கள் கைக்குலுக்கி வாழ்த்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தருமபுரி 4 ரோட்டில் தொடங்கி, பென்னாகரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பம்பை மற்றும் மேலதிளங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களை எச்சரித்த எமதர்மன்
 
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகள் அடங்கிய, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் மாவட்ட போக்குவரத்து அலுவலர் தாமோதரன் ஆகியோர் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நகர காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சின்னசாமி, ரகு, சதீஷ்குமார், உள்ளிட்ட காவல் துறையினர் போக்குவரத்து துறையினர், பம்பை, இசைக் கலைஞர்கள், கிராமிய நாடக கலைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Embed widget