மேலும் அறிய

தொடர்ந்து அதிகரிக்கும் மேட்டூர் அணை: 24 மணி நேரமும் கண்காணிப்பு!

மேட்டூர் அணை எப்போது வேண்டுமானாலும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும்.

வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் அதிக கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதாக சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவ சண்முகராஜா தெரிவித்தார்.

தொடர்ந்து அதிகரிக்கும் மேட்டூர் அணை: 24 மணி நேரமும் கண்காணிப்பு!

சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் சிவ சண்முகராஜா  மேட்டூர் அணையில்   ஆய்வு செய்தார். மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி அணை 16 கண் பாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர் அணை நிரம்பியவுடன் உபரி நீர் திறப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது மேட்டூர் அணையில் உள்ள நீர் பச்சை நிறத்தில் காட்சியளித்தது. சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அது குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் கர்நாடக மாநிலத்தில் கழிவுகள் கலப்பதால் மேட்டூர் அணையில் வரும் காவிரி நீரானது பச்சை நிறத்தில் வருவதாகவும், அதற்கென தனி குழுவை கொண்டு பொதுப்பணித்துறை சார்பில் சுத்தம் செய்து வருவதாக கூறினார். மேலும், மேட்டூர் அணையின் இடது கரை, தண்ணீர் வெளியேற்றப்படும் பகுதிகள், சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவ சண்முகராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அதிகரிக்கும் மேட்டூர் அணை: 24 மணி நேரமும் கண்காணிப்பு!

ஆய்வுக்குப் பின்னர் சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவ சண்முகராஜா செய்தியாளர்களை சந்தித்த அவர், மேட்டூர் அணையில் தற்போது 119 அடி தண்ணீர் உள்ளது. வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் அதிக கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை முதல் 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய உடன் உபரி நீர் திறப்பது குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சேலம் மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் மேலாண்மை பயிற்சியும் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சிவ சண்முகராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேட்டூர் அணை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  ஆய்வின்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மேட்டூர் சார் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், மேட்டூர் அணை செயற்பொறியாளர் தேவராஜன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

தலைப்பு செய்திகள்

சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget