மேலும் அறிய

MetturDam: மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு: டெல்டா மாவட்டங்களில் பாதிப்பா? நீர்மட்டம், இருப்பு நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,500 கன அடியாக சரிந்துள்ளது, அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,500 கன அடியாக சரிந்துள்ளது, அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிவு

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் மூலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி என டெல்டா உள்பட 11 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழை​யால் அங்​குள்ள கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பின. இதனால் காவிரி​யில் உபரிநீர் திறக்​கப்​பட்​டு, மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 4 முறை நிரம்​பியது. 

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரி நீர் திறப்பு குறைப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது நேற்று வினாடிக்கு 16,500 கன அடியாக சரிந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 16,500 கன அடியாக நீடிக்கிறது.

இதையடுத்து அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 15,500 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 8,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகு வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு - பரிசல் பயணத்திற்கு அனுமதி

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று, 18,000 கன அடியாக குறைந்ததால், பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து, அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து, உபரிநீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு, 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 18,000 கன அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து சரிவால், மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து குறைந்து ரம்மியமாக தண்ணீர் கொட்டுகிறது. தர்மபுரி மாவட்ட நிர்வாகம் காவிரியாற்றில் பரிசல் இயக்க, ஐந்து நாட்களுக்கு பின் அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் காவிரியாற்றில் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஆனால், தொடர்ந்து ஆறாவது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

“என்னை, என் மகளை விட்டு விடுங்கள்” கதறிய தாய்.. தர தரவென இழுத்து சென்ற போலீஸ் - நடந்தது என்ன?
“என்னை, என் மகளை விட்டு விடுங்கள்” கதறிய தாய்.. தர தரவென இழுத்து சென்ற போலீஸ் - நடந்தது என்ன?
”பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் தவறாக பேசியிருக்கிறார்” - துரை வைகோ குற்றச்சாட்டு
”பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் தவறாக பேசியிருக்கிறார்” - துரை வைகோ குற்றச்சாட்டு
"யாரையும் நம்பிப் பணம் கொடுத்து ஏமாந்துடாதீங்க" - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பொதுமக்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rasi Palan Tamil Today (19-11-2026): யாருக்கு ஜாக்பாட், யாருக்கெல்லாம் சோதனை? உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Rasi Palan Tamil Today (19-11-2026): யாருக்கு ஜாக்பாட், யாருக்கெல்லாம் சோதனை? உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
IND vs NZ 1st Test: சம்.. சம்.. சம்பவம் செய்யும் பும்ரா.. தடுமாறும் நியூசிலாந்து! முதல் டெஸ்டில் இந்தியா மிரட்டல்!
IND vs NZ 1st Test: சம்.. சம்.. சம்பவம் செய்யும் பும்ரா.. தடுமாறும் நியூசிலாந்து! முதல் டெஸ்டில் இந்தியா மிரட்டல்!
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?
மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?
Embed widget