மேலும் அறிய

திருட்டு திமுக சொன்ன சீமானை ஸ்டாலின் ஆதரிப்பது ஏன்? சரவெடியாய் வெடிக்கும் அமைச்சர் வன்னியரசு!

Vanniyarasu Vs DMK: சீமான் பேனாவை உடைப்பேன் என்றபோது திமுகவினர் கண்டிக்கவில்லை. இப்போது மலிவான அரசியல் செய்கின்றனர் என அமைச்சர் வன்னியரசு விமர்சனம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வன்னியரசு: மழை முன்னெச்சரிக்கை குறித்து மரக்காணம் பகுதியில் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும் என முன்பே கண்டறிந்து அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, பதற்றம் தேவையில்லை.

செஞ்சி சிறுமி மாயம்

செஞ்சி சிறுமி மாயமானது தொடர்பாக மாவட்ட கலெக்டர், எஸ்.பி.யிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை தர தயாராக இருக்கிறோம். தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தாயின் கண்ணீரை உணர்ந்து தேடுதல் வேட்டை தீவிரமாக நடக்கிறது.
கோவை பள்ளி மாணவன் தற்கொலை ஏற்றுக்கொள்ள முடியாதது. தலைவர் திருமாவளவன் அறிக்கை கொடுத்துள்ளார். பொறுப்பு அமைச்சர், கமிஷனர், ஏ.டி.ஜி.பி. மற்றும் போராட்டக்காரர்களுடன் பேசி வருகிறோம். விரைவில் தீர்வு வரும். பள்ளிகளில் சாதிய பாகுபாட்டை ஒழிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். கயிறு கட்டுவது போன்ற அடையாளங்களை தவிர்க்கவும், உடற்பயிற்சி பீரியடை அதிகரிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

சீமானை ஆதரிக்கும் திமுக

பார்ப்பன கடப்பாரை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன்", "திருட்டு திமுக" என சீமான் பேசியபோது, கலைஞரை இழிவாக பேசியபோது, பேனாவை உடைப்பேன் என்றபோது திமுகவினர் கண்டிக்கவில்லை. இப்போது மலிவான அரசியல் செய்கின்றனர். ஆரிய திராவிட யுத்தத்தில் ஆரிய கோட்பாட்டை உள்வாங்கிய சீமானை ஆதரிப்பது எந்த விதத்தில் சரி என்பதே எங்கள் கேள்வி. அதற்கு பதில் சொல்லாமல் எங்களை திட்டுவது தான் திமுக நிலைப்பாடா என மக்கள் மன்றத்தில் கேட்கிறேன். நான் கேட்ட கேள்விக்கு திமுகவினர் பதில் சொல்லவில்லை, அதனை திசை திருப்பும் வகையில் தான் பேசி வருகிறார்கள்.

போதையில்லா தமிழகம் என்பதே முக்கியம். யார் செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறைப்படுத்தப்படுகிறது. தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார். இது ஜனநாயக நாடு. யாரும் கட்சி தொடங்கலாம், மக்களை சந்திக்கலாம். மக்கள்தான் முடிவு செய்வார்கள். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!

டி.ஆர்.பி. ராஜா சொல்வது  நகைச்சுவையா இருக்கு

தமிழ்நாடு அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் கட்டமைத்த மதச்சார்பற்ற மாநிலம். இங்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சிறுபான்மையினருக்கு எதிராக குறி வைத்தால் நடக்காது. மதச்சார்பின்மையும், சமூக நீதியும் இங்கு ஆழமாக வேரூன்றியுள்ளது. அதை யாராலும் அசைக்க முடியாது.
டி.ஆர்.பி. ராஜா சொல்வது தான் இதில் நகைச்சுவையாக இருக்கிறது. எங்களைப் போன்ற ஏழை பாழைகள் தான் இன்றைக்கு அமைச்சராக இருக்கிறோம். அவரைப் போன்ற வசதி படைத்தவர்கள், மிட்டா மிராசுகள் இல்லை இன்றைக்கு. அதனால் அவர் பேசுவது ஒரு நகைச்சுவையாக இருக்கிறது" என்றார்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
Manickam Tagore: நீங்களா நாங்களா பாத்துடுவோம்.. எந்த எல்லைக்கும் போக தயார்.. DK சிவக்குமாருக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
Manickam Tagore: நீங்களா நாங்களா பாத்துடுவோம்.. எந்த எல்லைக்கும் போக தயார்.. DK சிவக்குமாருக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
அதிமுகவில் கல்யாணசுந்தரத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரமிக்க பதவி: யார் இந்த கல்யாண சுந்தரம்?
அதிமுகவில் கல்யாணசுந்தரத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரமிக்க பதவி: யார் இந்த கல்யாண சுந்தரம்?
’தவெக-வில் இணைந்த வழக்கறிஞர் சங்க நிர்வாகி ரேவதி’ வலுபெறும் தவெக வழக்கறிஞர் பிரிவு..!
'தவெக-வில் இணைந்த வழங்கறிஞர் சங்க நிர்வாகி’ யார் இந்த ரேவதி மணிவண்ணன்?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாகிஸ்தானை பந்தாடுமா இந்திய அணி! - இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு
பாகிஸ்தானை பந்தாடுமா இந்திய அணி! - இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
"பஞ்ச் டயலாக பேசி ஆட்சி நடத்தும் டம்மி முதல்வர்" - காவல் மரணங்கள் தொடர்வதாக எதிர்க்கட்சித்தலைவர் விமர்சனம்!
U19 IND vs PAK: அப்துல் காதர் காட்டடி.. உஸ்மான் கான் மொரட்டு செஞ்சுரி! பாகிஸ்தான் பலே பேட்டிங்! இறுதிப்போட்டியில் வெல்லுமா இந்தியா?
U19 IND vs PAK: அப்துல் காதர் காட்டடி.. உஸ்மான் கான் மொரட்டு செஞ்சுரி! பாகிஸ்தான் பலே பேட்டிங்! இறுதிப்போட்டியில் வெல்லுமா இந்தியா?
2027 ஜனவரியில் புதிய ரயில் சேவை? திருச்சியில் ரூ.60 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பணிமனை!
2027 ஜனவரியில் புதிய ரயில் சேவை? திருச்சியில் ரூ.60 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பணிமனை!
Tanishq கொள்ளை: மதுரை இளைஞர் துணி எரித்த சிசிடிவி! நகைகள் பதுக்கினாரா?
Tanishq கொள்ளை: மதுரை இளைஞர் துணி எரித்த சிசிடிவி! நகைகள் பதுக்கினாரா?
Embed widget