மேலும் அறிய

Pasumpon Thevar Jayanthi : ‘பசும்பொன்னிற்கு செல்லாத முதல்வர் விஜய்’ முக்குலத்தோரை மீண்டும் கையிலெடுக்கும் அதிமுக..!

’சில போஸ்டர்களை காரணமாக காட்டி முதல்வர் விஜயை, பசும்பொன்னிற்கு செல்லாமல் தடுத்திருப்பதன் மூலம், தவெக அரசுக்கு மிகப்பெரிய அளவில் முக்குலத்தோர் சமுதாயம் எதிர்ப்பாக மாற வாய்ப்பு உள்ளது’

ஒவ்வொரு ஆண்டும் பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு, மாநில முதல்வர்கள் செல்வது மரபாகவே மாறிப்போயிருந்தது. கடந்த காலங்களில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என அனைவரும் பசும்பொன்னிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்த முறை தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரும் முக்குலத்தோர் மக்களின் ஆதரவை பெறும் வகையில், பசும்பொன் செல்வதற்காக திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், மாற்று சமூக அமைப்புகள் சில ஆங்காங்கே, முதல்வர் விஜய் பசும்பொன் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் அடித்து ஒட்டியதால், அதனை காரணமாக வைத்து, பசும்பொன்னிற்கு முதல்வர் விஜய் செல்லும் திட்டத்தை சிலர் தடுத்து நிறுத்தியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்குலத்தோரை கையிலெடுக்கும் எடப்பாடி பழனிசாமி

இதனையடுத்து, அதிமுக ஆதரவில் இருந்து சரிந்த முக்குலத்தோர் வாக்குகளை மீண்டும் கையிலெடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருக்கிறார். அதனால்தான், அவர் தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன்னிற்கு சென்று மரியாதை செலுத்தவுள்ளதாக அறிவிப்பாகவே வெளியிட்டுள்ளார். சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்கியதால் எடப்பாடி பழனிசாமி மீது முக்குலத்தோர் சமுதாய மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அந்த அதிருப்தை ஈடுகட்டி, மீண்டும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை அதிமுக பக்கம் திருப்பவும், அந்த சமூக இளைஞர்களை கவரவும் அதிமுக தற்போது திட்டம் தீட்டியிருக்கிறது.

பசும்பொன்னிற்கு செல்லும் மு.க.ஸ்டாலின் ?

அதே நேரத்தில் திமுகவும் தேவர் சமுதாயத்தின் ஆதரவை பெறும் வகையில் அந்த கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினே, பசும்பொன்னிற்கு செல்ல திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவிற்கு பின்னர் தங்கள் சமூகத்திற்கு உரிய அங்கீகாரமும் பாதுகாப்பும் இல்லையென முக்குலத்தோர் சமுதாயத்தினர் கடும் அதிருப்தியில் இருந்தனர். திமுக ஆட்சியிலும் அவர்களை கவர உரிய திட்டங்கள் வகுக்கப்படவில்லை. திமுக ஆட்சியை இழந்ததற்கு இதுவும் முக்கியமான காரணங்களுள் ஒன்று என கூறப்படுகிறது. இந்நிலையில், அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்ல முடிவெடுத்திருக்கும் திமுக, முக்குலத்தோர் சமுதாயத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக  அந்த சமுதாயத்திற்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க  முடிவு செய்துள்ளது.

கோட்டை விடும் முதல்வர் விஜய் ?

ஆனால், ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் விஜயை, சில போஸ்டர்களை காரணமாக காட்டி பசும்பொன்னிற்கு செல்லாமல் தடுத்திருப்பதன் மூலம், தவெக அரசுக்கு மிகப்பெரிய அளவில் முக்குலத்தோர் சமுதாயம் எதிர்ப்பாக மாற வாய்ப்பு உள்ளது. ஒரு சில அமைப்புகளின் எதிர்ப்பால் முக்குலத்தோர் கடவுளாக வழிபடக்கூடிய தேவர் நினைவிடத்திற்கு வராத விஜய், தேவர் சமுதாயத்திற்கு எப்படி நல்லது செய்வார்? என்ற கேள்வியும் அந்த மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. பசும்பொன்னிற்கு செல்லாமல் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது

சரியான வழிகாட்டுதல்

இது தொடர்பாக தவெக தரப்பிடம் விசாரித்தபோது, முதல்வர் விஜய் எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவர் அல்லது சமுதாய தலைவரின் நினைவிடத்திற்கு செல்லாமல் இருப்பதே அவரை பொதுவான தலைவராக அடையாளப்படுத்தும் என்றும் அனைத்துத் தரப்பு மக்களும் முதல்வர் விஜயை கொண்டாட, இப்படியான அணுகுமுறையையே அவர் பின்பற்ற வேண்டும் என்றும் இதுவே சரியான நிலைபாடு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி... பணப்பெட்டிகளுடன் சுற்றும் ஊழல் சக்திகள்! எம்.பி. மாணிக்கம் தாகூர்!
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி... பணப்பெட்டிகளுடன் சுற்றும் ஊழல் சக்திகள்! எம்.பி. மாணிக்கம் தாகூர்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
ஒரே நாளில் 9 கொலைகள்.. தீபாவளியன்று அசுரர் ஆட்சியை நினைவூட்டுகிறதா தவெக அரசு? டிடிவி தினகரன் ஆவேசம்!
ஒரே நாளில் 9 கொலைகள்.. தீபாவளியன்று அசுரர் ஆட்சியை நினைவூட்டுகிறதா தவெக அரசு? டிடிவி தினகரன் ஆவேசம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
Embed widget