மேலும் அறிய

Kamarajar Poster : “தந்தை பெரியார் மாதிரி, தந்தை காமராஜர்” பேசுபொருளாகும் பாஜக மருத்துவ பிரிவு செயலாளர் போஸ்டர்..!

”தமிழ்நாட்டில் பெரியாரை மட்டுமே ‘தந்தை’ பெரியார் என்று அழைக்கும் வழக்கம் உள்ள நிலையில், காமராஜரை ‘தந்தை’ என குறிப்பிட்டு பாஜகவினரால் போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது”

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், வடசென்னை, தென் சென்னை என 5 தொகுதிகளில் நாடார் சமூகத்தை சேர்த்தவர்கள் போட்டியிட வாய்ப்பளித்து ஒட்டு மொத்த நாடார் சமூகத்தையும் பாஜக ஆதரவு நிலைபாடு எடுக்க வைக்க, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு, அதற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்தி வருகிறார். இந்நிலையில், தந்தை பெரியார் என்று சொல்வதை போல, காமராஜரை ”தந்தை” என்று குறிப்பிட்டு பாஜக மாநில மருத்துவ பிரிவு மாநில செயலாளர்  வெளியிட்டுள்ள போஸ்டர் பேசுபொருளாகி வருகிறது.Kamarajar Poster : “தந்தை பெரியார் மாதிரி, தந்தை காமராஜர்” பேசுபொருளாகும் பாஜக மருத்துவ பிரிவு செயலாளர் போஸ்டர்..!

செல்வாக்கு மிக்க தலைவர்களான பொன்னார், தமிழிசை

ஏற்கனவே, பாஜகவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களாக நாடார் சமூகத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உள்ளனர். அதோடு, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து வந்த கரு.நாகராஜனும் இப்போது தமிழக பாஜகவில் அசைக்க முடியாத நபராக வலம் வருகிறார்.  இந்நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு சமூக வாக்குகளையும் பாஜக பக்கம் ஈர்க்கும் திட்டத்தில் தமிழக பாஜக இப்போதே இறங்கியுள்ளது.

அந்தந்த சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மறைந்த தலைவர்களை போற்றுவது, அவர்கள் குறித்து மேடைகளில் முழங்குவது, அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பாஜகவினர் பல்வேறு வியூகங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாடார் வாக்குகளை பெற திட்டம்

இந்நிலையில், தமிழ்நாட்டின் பெரும்பான்மையான சமூகங்களில் ஒன்றாக திகழும் நாடார் சமூக மக்களை ஒன்றிணைத்து பாஜக பக்கம் அணித் திரட்டும் பணிகளில் பாஜக மாநில தலைமை ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அதோடு, பாஜகவில் பெரிய தலைவர்களாக உள்ளவர்களை கடந்து, மற்ற பதவிகளிலும் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் தர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Kamarajar Poster : “தந்தை பெரியார் மாதிரி, தந்தை காமராஜர்” பேசுபொருளாகும் பாஜக மருத்துவ பிரிவு செயலாளர் போஸ்டர்..!

நாளை நடைபெறும் மும்பெரும் விழா  - நிகழ்ச்சியில் பங்கேற்கும் அண்ணாமலை

நாளை பாஜக மருத்துவ பிரிவு சார்பில் சென்னை மடிப்பாக்கத்தில், காமராஜர், மார்ஷல் நேசமணி, ம.பொ. சிவஞானகிராமணி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி மும்பெரும் விழா நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தாலைவர் அண்ணாமலை பங்கேற்பதோடு, நாடார் சமூக தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நாடார்களின் பெருமைகள் குறித்தும் அவர்களின் உழைப்பு பற்றியும் பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவார் என்றும் காமராஜர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும் அவர் ஆட்சியை தமிழ்நாட்டில் அமைப்போம் என்ற ரீதியில் அவரது பேச்சு வடிவமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

தந்தை பெரியார் போல – தந்தை காமரஜார் – போஸ்டரால் புதிய சர்ச்சை

இந்த மும்பெரும் விழாவை பாஜக மாநில மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் குமரன் என்பவர் ஒருங்கிணைத்து வருகிறார். இதற்காக அவர் வெளியிட்டுள்ள வரவேற்பு போஸ்டரில் காமராஜரை ’தந்தை’ காமராஜர் என்று குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக, பெருந்தலைவர், கிங் மேக்கர் என்றுதான் தமிழ்நாட்டில் காமராஜரை அழைப்பது வாடிக்கையாக உள்ளது. பெரியாரை மட்டும்தான் ‘தந்தை’ பெரியார் என்று தமிழ்நாட்டு மக்கள் அழைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், காமராஜாரை ‘தந்தை’ காமராஜர் என்று அழைத்து, பாஜக மருத்துவர் பிரிவு மாநில செயலாளர் குமரன் குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget