petrol and diesel price hike: பெட்ரோல், டீசல் வரி குறைப்பு எப்போது? தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி பதில்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பெட்ரோல் பங்க்குகள் முன் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரியிடம் திமுக அரசு பெட்ரோல் மீதான மாநில வரியை எப்போது குறைக்கும் என கேள்வி எழுப்பி உள்ளனர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூன் 11 (இன்று)தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல் பங்க்குகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை மூலமாக அறிவித்திருந்தார். இந்த போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கொரோனா விதிமுறைகளின்படி சமூக விலகலைக் கடைப்பிடித்து பங்கேற்க வேண்டும். பெரும் கூட்டம் சேர்ப்பது கொரோனா விதிமீறல் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 10 நபர்களுக்கு மிகாமல் இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்தி அதிக எண்ணிக்கையில் நடத்த வேண்டும். மேலும் போராட்டத்தின் போது அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உட்பட 20ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் இரு சக்கர வாகனங்களுக்கு மலர்களை தூவி தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி
ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவை ஆண்டபோது கூட ஆறில் ஒரு பங்குதான் வரி வசூலிக்க பட்டபட்டதாகவும் நரேந்திர மோடி ஆட்சியில் பெட்ரோலுக்கு 52 சதவீகிதம் வரிவிதிக்கப்படுவதாகவும் நரேந்திரமோடி ஆட்சியை விட ஒரு கொடுமையான ஆட்சியை பார்த்ததுண்டா எனவும் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சி அமைந்ததும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான மாநில அரசின் வரி குறைக்கப்படும் என கூறி இருந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி அமைத்து 30 நாட்கள் தான் ஆகிறது எனவும் ஆகவே இந்த ஆட்சியை பச்சிளம் குழந்தையாக தான் இருக்கிறது என்று கூறினார். மேலும் இந்த கொரானா தொற்று பரவல் நிறைவடைந்தவுடன் மற்ற வேலைகளை முதல்வர் ஆரம்பிப்பார் என்று தெரிவித்துள்ள கே.எஸ்.அழகிரி. திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைப்பேன் என்று கூறி இருக்கிறது, எனவே கண்டிப்பாக குறைக்கப்படும் எனவும், மோடிக்கு 6 ஆண்டு காலம் கொடுத்தீர்கள், இவருக்கு 30 நாட்கள் கூட நேரம் கொடுக்க மாட்டீர்களா? என கேள்வி எழுப்பினார். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பெட்ரோல் பங்க்குகள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் அதன் மீது மத்திய அரசு விதித்துள்ள வரியை குறைக்க கோரியும் போராட்டங்கள் நடத்தினர்