மேலும் அறிய

SDPI : ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்’ எஸ்டிபிஐ கடும் எதிர்ப்பு

'நாட்டின் மிக முக்கியமான முடிவெடுக்கும் இடமான நாடாளுமன்றத்திலேயே அதைப் பற்றிப் பேசக்கூடாது என்பது ஏற்புடையதல்ல'

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று கேள்வி எழுப்பிய தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது.

நெல்லை முபாரக் அறிக்கை

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜனநாயகத்தின் மிக உயரிய இடமாகவும், மக்களின் பிரதிநிதிகள் தேசத்தின் முக்கியப் பிரச்சினைகளை முன்வைக்கும் தளமாகவும் விளங்குவது நமது நாடாளுமன்றம். ஆனால், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை விவாதிக்கக் கோரிய, தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளுக்கே எதிரானது. மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விவகாரத்தை, அதிகார பலத்தைக் கொண்டு ஒடுக்குவது என்பது ஆரோக்கியமான நாடாளுமன்ற நடைமுறைக்கு அழகல்ல.

உண்மைகளை மூடி மறைக்கும் செயல்

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணே அவர்கள் தனது நினைவுக் குறிப்பு  புத்தகத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லை விவகாரங்கள் குறித்து குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் தேச நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமானவை. ராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவரின் கருத்துகள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் கோருவதும், விவாதம் நடத்துவதும் எதிர்க்கட்சிகளின் கடமையாகும். அந்த கடமையைச் செய்ய முற்பட்ட உறுப்பினர்களைச் சபையிலிருந்து சஸ்பெண்ட் செய்வது, அரசின் மீதான சந்தேகங்களை வலுப்படுத்துவதோடு, உண்மைகளை மூடி மறைக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

மக்களின் கேள்விகளை தவிர்க்க முடியாது

நாட்டின் பாதுகாப்பு என்பது ரகசியமாக வைக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், நாட்டின் மிக முக்கியமான முடிவெடுக்கும் இடமான நாடாளுமன்றத்திலேயே அதைப் பற்றிப் பேசக்கூடாது என்பது ஏற்புடையதல்ல. எம்.பி.க்களின் குரலை ஒடுக்குவதன் மூலம் ஒரு அரசு தற்காலிகமாக விவாதங்களைத் தவிர்க்கலாம், ஆனால் மக்களின் கேள்விகளைத் தவிர்க்க முடியாது.

இடை நீக்கத்தை ரத்து செய்க

எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கத்தை உடனே ரத்து செய்வதுடன், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய அரசு வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என  தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

" திமுக செஞ்ச துரோகத்தால தான் ஆட்சியே போச்சு " - எடப்பாடியை கழட்டி விட்ட பூவை ஜெகன் மூர்த்தி
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget