மேலும் அறிய

ஓபிஎஸ் அணியினர் விரைவில் சேலத்தில் பிரம்மாண்ட மாநாடு - புகழேந்தி தகவல்

ஓபிஎஸ் அணியினர் விரைவில்  சேலத்தில் மாநாடு நடத்த இருப்பதாக  அதிமுக ஓபிஎஸ் அணி கொள்கைபரப்பு செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் அதிமுக ஓபிஎஸ் அணியினரின் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக (ஓபிஎஸ் அணி) கொள்கைபரப்பு செயலாளர் புகழேந்தி கலந்துகொண்டு கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசுதொகுப்பில் அரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்புதுண்டு, பணம் ஆகியவை வழங்கப்படட்து. ஆனால் திமுக அரசு ஆயிரம் ரூபாய் பணம் மட்டுமே வழங்கியுள்ளது. 


ஓபிஎஸ் அணியினர் விரைவில் சேலத்தில் பிரம்மாண்ட மாநாடு - புகழேந்தி தகவல்

ஓபிஎஸ் 21ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் போட்டதும், போட்டியாக இபிஎஸ் 27 -ஆம் தேதி ஒரு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். எதற்காக அந்த கூட்டத்தை நடத்தினார் என்று அவருக்கே தெரியவில்லை.  அதிமுகவை காப்பாற்றுகின்ற இடத்தில் ஓபிஎஸ் இருக்கிறார். அதிமுகவை உடைத்து இபிஎஸ் என்ன லாபம் காணுகிறார் என்று தெரியவில்லை. பழனிச்சாமி திமுக அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த வழக்கிலும் கைது ஆகாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். 


ஓபிஎஸ் அணியினர் விரைவில் சேலத்தில் பிரம்மாண்ட மாநாடு - புகழேந்தி தகவல்

கொடநாடு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் அவர்மீது நிலுவையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜர் மீது கொடுக்கப்பட்ட பருப்பு கொள்முதல் ஊழல் குறித்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரேஷன் கடைகளுக்கு சர்க்கரை வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி திமுக ஆட்சி அமைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று திமுக தொண்டர்கள் அனைவரும் கேட்கின்றனர். 


ஓபிஎஸ் அணியினர் விரைவில் சேலத்தில் பிரம்மாண்ட மாநாடு - புகழேந்தி தகவல்

அதனால்தான் எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சுதந்திரமாக சுற்றிதிரிந்து கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிடும் போதுதான் சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று முடிவு எடுப்பார்கள். அதுவரை சின்னம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். எந்த புகார் வந்தாலும் வாங்கிவைத்து கொள்வார்கள். தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்காது. நீதிமன்ற உத்தரவுபடி தேர்தல் ஆணையம் செயல்படும். 


ஓபிஎஸ் அணியினர் விரைவில் சேலத்தில் பிரம்மாண்ட மாநாடு - புகழேந்தி தகவல்

ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராக இருந்தபோது கட்சி நிதி பாதுகாக்கப்பட்டது. ஆனால், தற்போது அதிமுக கட்சி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டு அரசியல் நடத்துபவர்கள் சேர்ந்து செயல்படலாம் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். அதுபோல் இணைந்து செயல்பட்டால் நல்லதுதான். தேர்தல் வந்தால் அதிமுக கட்சி பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் தொடர்ந்து முதல்வராக இருந்திருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் வந்திருக்காது. பன்னீர்செல்வம் என்ற தலைவர் இல்லை என்றால் அதிமுக சர்வாதிகாரியிடம் கட்சி சென்றுவிடும். இபிஎஸ் மாநாடு நடத்த திட்டம் உள்ளது குறித்த கேள்விக்கு நாங்களும் பெரிய அளவில் மாநாடு நடத்த இருக்கிறோம். அது திருச்சி, தஞ்சாவூர் அல்லது சேலமாக இருக்கலாம்.


ஓபிஎஸ் அணியினர் விரைவில் சேலத்தில் பிரம்மாண்ட மாநாடு - புகழேந்தி தகவல்

இபிஎஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் பார்ப்போம். சசிகலா, டிடிவி, இபிஎஸ், ஓபிஎஸ் அனைவரும் ஒன்றினைந்தபின்புதான் யார் தலைமை என்பதை முடிவு செய்வோம் அதுவரையில் நாங்கள் ஓபிஎஸ் தலைமையைத்தான் இருப்போம் என்றார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாட்களை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்றார். உடன் மாவட்ட செயலாளர் கஜேந்திரன், பொறுப்பாளர்கள் மகாகணபதி உட்பட பலர் இருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

உதயநிதி படத்தால் விழுப்புரம் நகர மன்றத்தில் வெடித்த வாக்குவாதம்: அகற்ற மறுத்த தலைவி!
உதயநிதி படத்தால் விழுப்புரம் நகர மன்றத்தில் வெடித்த வாக்குவாதம்: அகற்ற மறுத்த தலைவி!
திருபுவனத்தில் தொடங்கிய அண்ணாமலையின் புதிய அலை! உறுப்பினர் சேர்க்கையில் மக்கள் ஆர்வம்!
திருபுவனத்தில் தொடங்கிய அண்ணாமலையின் புதிய அலை! உறுப்பினர் சேர்க்கையில் மக்கள் ஆர்வம்!
பாஜக, ரங்கசாமியிடம் சரண்டர் ஆகிவிட்டது! – முன்னாள் முதல்வர் நாராயணசாமி அதிரடி குற்றச்சாட்டு!
பாஜக, ரங்கசாமியிடம் சரண்டர் ஆகிவிட்டது! – முன்னாள் முதல்வர் நாராயணசாமி அதிரடி குற்றச்சாட்டு!
அதிமுகவில் என்ன பிரச்னை? உட்கட்சி முரண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் - திருமாவளவன் !
அதிமுகவில் என்ன பிரச்னை? உட்கட்சி முரண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் - திருமாவளவன் !

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அசத்தலாக அறிமுகமான டாடா சியரா இவி
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அசத்தலாக அறிமுகமான டாடா சியரா இவி
Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Pakistan Minister Warning: “கைகளை வெட்டுவோம்“; இந்தியாவிற்கு பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்.! எதற்காக தெரியுமா.?
“கைகளை வெட்டுவோம்“; இந்தியாவிற்கு பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்.! எதற்காக தெரியுமா.?
Updated Maruti Brezza: டர்போ எஞ்சின், ADAS உடன் அசத்த வரும் புதுப்பிக்கப்பட்ட மாருதி பிரெஸ்ஸா; விரைவில் லாஞ்ச்; ரெடியா.?
டர்போ எஞ்சின், ADAS உடன் அசத்த வரும் புதுப்பிக்கப்பட்ட மாருதி பிரெஸ்ஸா; விரைவில் லாஞ்ச்; ரெடியா.?
Vaiko: ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
Embed widget