மேலும் அறிய

Eps vs Ops: இபிஎஸ்யோடு மீண்டும் கை கோர்க்கும் ஓபிஎஸ்.? தேனியில் கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்

Eps vs Ops: எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் இணைந்துள்ளார்கள். எனவே நானும் அதிமுகவில் இணைய தயார் என தெரிவித்துள்ள ஓபிஎஸ், இதற்கான பதிலை இபிஎஸ்யிடம் கேட்டு சொல்லவும் என கூறியுள்ளார்.

நெருங்கும் தேர்தல்- இபிஎஸ் போட்ட செம பிளான்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தினந்தோறும் புதிய, புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை அதிமுக உருவாக்கி வருகிறது. இதற்காக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில், பாஜகவை தனது அணியில் இணைத்த எடப்பாடி பழனிசாமி, அடுத்தாக கடந்த 8 வருடங்களாக எதிரும் புதிருமாக இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் இணைத்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வமும் மீண்டும் அதிமுக கூட்டணி இணைவாரா அல்லது நடிகர் விஜய்யின் தவெக அணியில் இணைவாரா என எதிர்பார்ப்பு எழுந்தது.

ஓபிஎஸ் கூட்டத்தில் சலசலப்பு

இந்த நிலையில், தேர்தலில் அடுத்தக்கட்ட முடிவு தொடர்பாக ஆலோசிக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் அவரச ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். பெரியகுளம் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது,  தொண்டர்களின் விருப்பம் மற்றும் கருத்துக்களை துண்டு சீட்டில் எழுதித் தருமாறு ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் தெரிவித்தார்.இதற்கு சில நிர்வாகிகள் ஆதரவும்,சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

ஒரு சில நிர்வாகிகள் கூட்டணி குறித்து தாங்கள் எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் மாறி மாறி கருத்துக்களை கூறியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், கூட்டணி குறித்து என்னுடைய நிலைபாடு தொடர்பாக யூகங்கள் அடிப்படையில் வதந்திகள் பரப்புவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் அதுதான் ஜனநாயகத்திற்கு அழகு  என கூறினார். சட்டபோராட்டம் நடத்தி வரும் இயக்கமாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் செயல்பட்டு வருகிறது

எங்களிடம் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதற்காக ராமநாதபுரத்தில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சையாக  போட்டியிட்டேன் அப்போது எவ்வாறெல்லாம் இடையூறு  செய்தார்கள் என்று உங்களுக்கே தெரியும். தொண்டர்களின் உரிமை காக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது அதற்காகத்தான் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம் தற்போது வரை அதிமுக ஒன்றிணைைய வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர நான் தனியாக வெற்றி வேண்டும்  பெற கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இல்லை. அதிமுகவை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தொடங்கப்படவில்லை. 

மீண்டும் அதிமுகவில் இணைய தயார்- இபிஎஸ் ரெடியா.? 

தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ தற்போது வரை இல்லையெனவும் தெரிவித்தார்.  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 2வது தர்மயுத்தம் தொடங்குவதற்கு வைத்திலிங்கமும், மனோஜ் பாண்டியனும் தான் காரணம் எனவும் கூறினார்.

அதிமுகவில் இணைய நான் தயாராக இருப்பதாவும், எனது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார். எனவே இதனை அவரிடம் கேட்டு சொல்லுங்கள் என கூறினார்.  மேலும் எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார். மேலும் எங்கள் அணி அதிமுகவில் இணைய டிடிவி தினகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டார். 

தலைப்பு செய்திகள்

ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget