மேலும் அறிய

Udhayanidhi Stalin: அமலாக்கத்துறை சோதனை ஜாலியாக போய்க்கொண்டிருக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்தியாவில் அனைத்து எதிர்கட்சிகளையும் பாஜகவிற்கு எதிராக ஒன்று திரட்டி நெருக்கடி கொடுப்பதால் அமலாக்கத்துறை சோதனை மூலம் திமுகவை பாஜக மிரட்டுகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. மாவட்ட கழக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதாமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக மூத்த முன்னோடி உறுப்பினர்கள் ஆயிரம் பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் பொற்கிழியும், மாற்றுத்திறனாளி 60 நபர்களுக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் 300 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை அனைவருக்கும் தனது கையாலேயே வழங்கினார்.


Udhayanidhi Stalin: அமலாக்கத்துறை சோதனை ஜாலியாக போய்க்கொண்டிருக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முன்னதாக விழா மேடையில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “நான் பிறந்தது சென்னை மாவட்டமாக இருந்தாலும் என்னுடைய தாய் மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம் தான், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரத்தின் போது எனது பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்தி என்னை கைது செய்ததும் இந்த மாவட்டத்தில் தான். இங்கு ஆரம்பித்த எனது பிரச்சாரம் தான் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து திமுக ஆட்சி அமைக்க அடித்தளமிட்டது. நம்முடைய முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். இதை பொறுக்காத ஒன்றிய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் ED, IT, CBI மூலம் அச்சுறுத்தி வருகின்றனர். நாங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சந்தித்தவர்கள் இதற்கெல்லாம் அச்சப்பட மாட்டோம். ED, மோடியை பார்த்து பயப்பட மாட்டேன்.


Udhayanidhi Stalin: அமலாக்கத்துறை சோதனை ஜாலியாக போய்க்கொண்டிருக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து, நமது முதல்வர் ஒன்றிய அரசை எதிர்பதால் இது போன்ற அழுத்தத்தை மோடி அரசு கொடுக்கிறது. ஒன்றிய பாஜக மற்றும் அதிமுக வால் திமுகவில் உள்ள சாதாரண கிளை செயலாளரை கூட தொட்டுப் பார்க்க முடியாது” என கூறினார்.

தமிழக ஆளுநர் ஆர்.ஏன்.ரவி தனக்கு கொடுத்த வேலையை விட்டு விட்டு மற்ற அனைத்து வேலைகளையும் செய்து வருவதாகவும், தமிழ்நாட்டின் பெயரை அவர் மாற்ற நினைப்பதாகவும் கூறினார். ஆளுநருக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தவர் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் தெரிவித்தார். உலகின் பணக்கார பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அதானி மோடியின் நெருங்கிய நண்பர் என்றும் , பிரதமர் மோடி எந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் விமானி இல்லாமல் கூட செல்வார் ஆனால் அதானி இல்லாமல் செல்ல மாட்டார் என விமர்சித்தார். ஒன்றிய அரசு அதிமுகவை தங்கள் அடிமை கட்சிகளாக வைத்துள்ளது அதேபோல் திமுகவையும் அடிமைப்படுத்த நினைத்தால் நடக்காது என்றார்.


Udhayanidhi Stalin: அமலாக்கத்துறை சோதனை ஜாலியாக போய்க்கொண்டிருக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

என்னை சின்னவர் என்று பட்டப்பெயர் வைத்து அழைக்காதீர்கள். நான் உண்மையாகவே அரசியல் அனுபவம் உள்ளிட்டவை அனைத்திலும் சின்னவன் தான் அந்த பட்டப் பெயரை தவிர்க்க வேண்டும் என்றும் கலைஞர் வைத்த அழகான உதயநிதி என்ற பெயரை கூறி அழைத்தாலே போதும் என்றார். நிகழ்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி கூறுகையில், பாஜக திமுகவை தொடர்ந்து எதிர்ப்பது திமுக நல்ல பாதையில் போய்க் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். ஒட்டுமொத்த தமிழகமே பாரதிய ஜனதா கட்சியை எதிர்கத்தான் செய்யும், எந்த காலத்திலும் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமலாக்கத்துறை சோதனையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? ஜாலியாக போய்க்கொண்டிருப்பதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget