மேலும் அறிய

திமுகவில் 90% இந்துக்கள் தான் உள்ளனர்; இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை - அமைச்சர் பொன்முடி

நீதி கட்சி தொடங்கி தற்போது வரை இந்து சமய அறநிலைத்துறை சிறப்பாக வழி நடத்தி வருவது திமுக.

திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி போல சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் திமுகவில் 90 சதவீதம் இந்துக்கL உள்ளனர் என விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.

விழுப்புரத்தில் திமுக தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக தான் சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது. 

அதிமுக எங்களுக்கும் பிஜேபிக்கும் சம்பந்தம் இல்லை என கூறி வருகிறது. ஆனால் சொல்கிறார்களே ஒழிய செயலில் காட்டவில்லை. அவர்களுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் மக்களுக்கு நன்றாகவே தெரியும் சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக அதிமுக இதனை எல்லாம் செய்து வருகிறது. திமுக இந்து மதத்திற்கு எதிர்ப்பானவர்கள் என்பது போல பிரச்சாரம் செய்து வருகிறார்கள். திமுகவில் இருப்பவர்களும் இந்துக்கள் தான். திமுக இந்துக்களுக்கும், கோயில்களுக்கும் எதிரி போல பேசுகிறார்கள்.

ஆனால் உண்மையில் நீதி கட்சி தொடங்கி தற்போது வரை இந்து சமய அறநிலைத்துறை சிறப்பாக வழி நடத்தி வருவது திமுக. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். அதனை தற்போது நிறைவேற்றி காட்டி இருப்பவர் முதல்வர் ஸ்டாலின். திமுகவில் இருப்பவர்கள் 90 சதவீதம் பேர் இந்துக்கள்தான். சேலம் மாநாட்டுக்கு பிறகு திமுகவை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். மாநில சுய ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக நடைபெற கூடிய மாநாடு. கவர்னர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு, நீதிமன்றம் ஆளுநர் செய்தது தப்பு என கூறியுள்ளது. இதனை செய்து காட்டியது தமிழ்நாடு அரசு.

நியமன பதிவில் இருக்கும் கவர்னர் நம்மை ஆட்டிப் படைக்க நினைக்கிறார். அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். பிஜேபி எதை வைத்து நம்மை மிரட்டுகிறதோ, அதையே நாம் மிரட்டுகிற அளவுக்கு நேற்றிருந்த சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 40 க்கு 40 திமுக வெற்றி பெறும். இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். உதயநிதி துணை முதல்வராக வரப் போகிறார் என சிலர் பேசி வருகிறார்கள், உதயநிதி ஸ்டாலின் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் வரலாம், அவருக்கு அந்த தகுதி இருக்கிறது என பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget