மேலும் அறிய

’ஏஜெண்டிடம் ஆலோசனை கேட்பதை விஜய் விட வேண்டும்’ சொன்னது இவர்தான்..!

தமிழகத்தில் இரண்டு அணிகள் மட்டுமே இருக்க வேண்டும் என பழ.கருப்பையா கருத்து தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஜனதா இமயவரம்பன் எழுதிய விடுதலைப் போரில் சீர்காழி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மார்கோனி இமயவரம்பன் தலைமை நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், நூலை வெளியிட அதனை பழ.கருப்பையா பெற்றுக் கொண்டார். இதில் வ.உ.சிதம்பரனார் பேரன் வ.உ.சி. வா.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர்கள், வாரிசுகள் பங்கேற்றனர். 

அரசியலுக்காக முருகரை கையில் எடுத்த பாஜக 

அதனைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாக பாஜக முருகரை கையில் எடுத்துள்ளது. அவர்கள் ராமரை தான் பொதுவாக கையில் எடுப்பார்கள். ராமாயணம் சிறந்தது என்பது எனது கருத்து. காப்பியங்கள் மனித குலத்தை மேம்படுத்துகின்றன. அதனால் தான் கம்பர் ராமரை பெரிதாக எழுதியதற்கு காரணம். தமிழ் சமூகம் செம்மை படுவதற்கு தானே தவிர அவர் வடநாடு, தென்னாடு என்பது அல்ல. முருகர் எப்பொழுதும் தமிழ் கடவுள் தான். தமிழ் கடவுளை ஆர்.எஸ்.எஸ் புதிதாக கையில் எடுத்துள்ளது. அரசியலுக்காக முருகரை எடுக்கிறார்கள்.


’ஏஜெண்டிடம் ஆலோசனை கேட்பதை விஜய் விட வேண்டும்’ சொன்னது இவர்தான்..!

தமிழர்களிடம் எந்த வேற்றுமையும் இல்லை

சிக்கந்தர் மலையில் சென்று மாமிசம் சாப்பிட்டால் தான் நமது உரிமை நிலை பெறும் என்று இல்லை. இது தேவையில்லை. சிறுபான்மையினர் மக்களை நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், என்ன நோக்கத்திற்காக அவர்கள் செய்கிறார்களோ அந்த நோக்கம் வெல்வதற்கு நீங்கள் துணை போகாதீர்கள். தமிழ் மக்கள் கலந்து வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். அவர்களிடம் எந்த வேற்றுமையும் இல்லை. 


’ஏஜெண்டிடம் ஆலோசனை கேட்பதை விஜய் விட வேண்டும்’ சொன்னது இவர்தான்..!

ஸ்டாலின் வேண்டுமா? வேண்டாமா?

சென்ற தேர்தல் மோடி வேண்டுமா? வேண்டாமா?என்பதற்கான தேர்தல். அதை நோக்கி அந்தத் தேர்தல் நடந்தது. தற்போது ஸ்டாலின் வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கான தேர்தல். இதில் எடப்பாடி பழனிச்சாமி முன் நின்றால் தான் எதிர்கொள்ள முடியுமே தவிர அதில் கூட்டணி ஆட்சி இதெல்லாம் இப்போது சொல்ல வேண்டாம்.

விஜயகாந்த் வழியில் விஜய் சென்றால் அது ஆபத்து 

விஜயகாந்த் மூன்றாவது அணி அமைத்து வீணாகி போய்விட்டார். அவர் அப்போது எதிர்க்கட்சியாக 28 இடங்களை பெற்று வந்தவர். பின்னர் வைகோ, சிபிஐ , சிபிஎம், திருமாவளவன் ஆகியோரை இணைத்து விஜயகாந்த் அப்போது மூன்றாவது அணி அமைத்து 13, 14 விழுக்காடு வாக்கு மட்டுமே பெற்று கடைசியில் முழுமை மற்றும் பெராமல் போய்விட்டார்கள். விஜய் அந்த முயற்சியை மேற்கொள்ளக்கூடாது .


’ஏஜெண்டிடம் ஆலோசனை கேட்பதை விஜய் விட வேண்டும்’ சொன்னது இவர்தான்..!

ஏஜென்ட்களிடம் யோசனை பெறும் விஜய்

விஜய் ஏஜென்ட்களிடம் யோசனை கேட்பதை விட வேண்டும். அவர்களெல்லாம் பணத்திற்காக யோசனை சொல்வார்கள். அன்புமணியை முதலமைச்சராக ஆக்குகிறேன் என்று சொன்னவர்கள். அன்புமணியை முதலமைச்சர் ஆக்கிவிட்டார்களா?தற்போது விஜயை முதலமைச்சர ஆக்குகிறோம் என்று சொல்லி வந்துள்ளனர். நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். விஜய்க்கு அரசியலில் வயது நிறைய இருக்கின்றது. முதல் படியில் நடைபெறாவிட்டார் இரண்டாவது படியில் நடக்கட்டும். முதலில் நாம் போட்டியிட்டு ஒன்றுமில்லாமல் போய் கமல் கட்சி போல் துடைத்து எறியப்படுகின்ற நிலை வந்தால் வீணாகிப் போய்விடும். அதனால் விஜய் மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டால் வீணாகப் போய்விடும்.


’ஏஜெண்டிடம் ஆலோசனை கேட்பதை விஜய் விட வேண்டும்’ சொன்னது இவர்தான்..!

அண்ணாமலையின் வெற்று பேச்சு 

இரண்டு அணி தான் இருக்க வேண்டும். ஒன்று ஸ்டாலின் வேண்டும் என்று சொல்கின்ற அணி. மற்றொன்று எடப்பாடி அணி. ஸ்டாலின் வேண்டாம் என்று சொல்கின்றவர்கள் திமுக வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் எடப்பாடி அணியில் தான் இருக்க வேண்டும். அண்ணாமலை வெட்டி கலகம் செய்கிறார். என்பது, நூறு சீட்டு என்பது வெற்றுப் பேச்சு. ஓ.பி.எஸ், பாமக ஆகியவற்றை சேர்த்து பெற்ற ஓட்டை பாஜக வாக்கு என்று சொல்வது நடக்காது. உண்மையான நோக்கம் திமுகவை வீழ்த்துவது என்றால் உங்கள் அழகு தெரிந்து இடத்தை பெறுங்கள். அல்லது தெரிந்து இடத்தை பெறுங்கள். 80 இடம் 90 இடம் ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி என்பது தேவையில்லாதது இப்படி பேசிப் பேசி எதிரி தான் பலப்படுத்துகிறீர்கள். இந்த அறிவு கூட இல்லாமல் நீங்கள் எப்படி அரசியல் நடத்துகிறீர்கள்.


’ஏஜெண்டிடம் ஆலோசனை கேட்பதை விஜய் விட வேண்டும்’ சொன்னது இவர்தான்..!

தேர்தலுக்கு முன்பாக ஆயிரம் மாறுதல்கள் வரும் 

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். கருணாநிதி மைனாரிட்டியாக இருந்த போதுக்கூட கூட்டணி ஆட்சி நடத்தவில்லை. கூட்டணி ஆட்சி சரியாக வராது. 10 மாதம் முன்பே பேசுவது சரியாக இருக்காது தேர்தலுக்கு முன்பாக ஆயிரம் மாறுதல் நடைபெறும். திமுக கூட்டணியில் கூடுதல் இடம் வேண்டும் என்று கேட்பவர்கள் மாறி வருவார்கள். கெஜ்ரிவாலை எப்படி கையாண்டார்கள். கெஜ்ரிவாலை ஆட்சியை விட்டே இறக்கினார்கள். கடைசியில் என்ன நடந்தது. அரசியல் எதுவும் நடக்கும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Embed widget