CM Vijay: எங்கள் கட்சியை பற்றி பேச நீங்கள் யார்? EPS-ன் தலைமை மாறினால் கட்சியை கலைத்துவிடுவீர்களா? விஜய்யை விளாசுவது யார் தெரியுமா?
இபிஎஸ் திமுகவுடன் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். ஒருவேளை இபிஎஸ்-ன் தலைமை மாறினால், விஜய் தனது கட்சியை கலைத்துவிடுவாரா?

தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது. இதில், பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்தது முதல்வர் விஜய் நேற்று பரபரப்புரை மேற்கொண்டார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
திமுகவுடன் அதிமுக சேர்ந்து சதி
பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய்: அதிமுக நல்ல கட்சி என்றும், ஆனால் எடப்பாடி பழனிசாமி மோசமானவர். தீய சக்தி திமுகவுடன் அதிமுக மறைமுக கூட்டணி. தீய சக்தி திமுகவின் பினாமிபோல் சுய நலமாக சுற்றுபவர்கள் நாம் கிடையாது. பாஜகவின் கிளையாக இருந்த ஒரு கட்சி, தற்போது திமுகவின் கிளையாக அதிமுக மாறியுள்ளது. திமுகவும், அதிமுகவும் ஒன்று தான், இருவருக்கும் ஒரே ஒனர் தான். யாரை எதிர்த்து எம்ஜிஆர் கட்சி தொடங்கினார்? யாரை எதிர்த்து ஜெயலலிதா அரசியல் செய்தார்? இருவரையும் அவமானப்படுத்துவது போல் திமுகவுடன் அதிமுக சேர்ந்து சதி செய்கிறது. சர்க்காரியா கமிஷன் பற்றி பேசினால் அதிமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது என கேள்வி எழுப்பினார். திமுகவுக்கு முட்டு கொடுக்கிறது அதிமுக என பேசியிருந்தார். இந்நிலையில் முதல்வர் விஜயின் பேச்சுக்கு தலைமை மாறினால், விஜய் தனது கட்சியை கலைத்துவிடுவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் கட்சியை கலைத்துவிடுவாரா?
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அதிமுக நல்ல கட்சி என்றும், ஆனால் எடப்பாடி பழனிசாமி மோசமானவர் என்றும் விஜய் கூறுகிறார். இபிஎஸ் திமுகவுடன் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். ஒருவேளை இபிஎஸ்-ன் தலைமை மாறினால், விஜய் தனது கட்சியை கலைத்துவிடுவாரா?
இபிஎஸ்-ன் தவறுகளைச் சுட்டிக்காட்ட கேசிபி (KCP) மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்; அப்படியிருக்க, அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு விஜய் யார்?
எம்ஜிஆரின் வாரிசாக முடியும்?
இபிஎஸ் மோசமானவர் என்பதற்காகவே விஜய் எப்படி எம்ஜிஆரின் வாரிசாக முடியும்? கேசிபி மற்றும் பலர் எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டவர்கள்; அதிமுகவைக் கவனித்துக்கொள்ள எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் உண்மையான விசுவாசிகள் உள்ளனர். போலியான விளம்பரங்கள் மூலம் தமிழக மக்களை விஜய் ஏமாற்றக்கூடாது என காட்டமாக தெரிவித்துள்ளார்.
Before You Go
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
ட்ரெண்டிங் செய்திகள்





















