இட ஒதுக்கீட்டை செய்த உச்சநீதிமன்றம் : கரூரில் ஆதித்தமிழர் பேரவை கொண்டாட்டம்
அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆதித்தமிழர் பேரவையினர், விளிம்பு நிலையில் இருந்த இனத்தின் வாழ்வில் முன்னேற்றம் காண உதவிய முதலமைச்சருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
அருந்ததியின மக்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி அளித்ததையடுத்து கரூரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் வரவேற்பு தெரிவித்தனர்.
அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆதித்தமிழர் பேரவையினர் விளிம்பு நிலையில் இருந்த இனத்தின் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வழி வகை செய்த கலைஞருக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற சாசன அமர்வு உறுதி செய்தது.
இதனை வரவேற்கும் விதத்திலும் 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சமூக மக்கள் முன்னேற்றம் காண சட்டமன்றத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி வழி வகை செய்த முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கரூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முத்தமிழ் அறிஞர் கொண்டு வந்த இட ஒதுக்கீடு மூலம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் அருந்ததியின மக்களின் பிள்ளைகள் உயர்கல்வி பயின்று வேலை வாய்ப்பை பெற முடியும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கும் இந்த சட்டத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய தற்போதைய முதலமைச்சர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். மேலும், அருந்ததியர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் முதலமைச்சருக்கும் நன்றியை தெரிவித்தனர்.